This is the Abode of Him Who Danced upon Kāliya
காளியன்மேல் நடனமாடியவன் வாழ்விடம் இது
1339 ஆநிரைமேய்த்துஅன்றுஅலைகடலடைத்திட்டு
அரக்கர்தம்சிரங்களையுருட்டி *
கார்நிறைமேகம்கலந்ததோருருவக்
கண்ணனார்கருதியகோயில் *
பூநிரைச்செருந்திபுன்னைமுத்தரும்பிப்
பொதும்பிடைவரிவண்டுமிண்டி *
தேனிரைத்துண்டுஅங்குஇன்னிசைமுரலும்
திருவெள்ளியங்குடியதுவே.