Those Who Sing This Tamil Garland Shall Become Emperors
இத்தமிழ்மாலை பாடுவார் சக்கரவர்த்தி ஆவார்
1227 வண்டார்பொழில்சூழ்ந்து அழகாயநாங்கூர்
மணிமாடக்கோயில்நெடுமாலுக்கு * என்றும்
தொண்டாயதொல்சீர் வயல்மங்கையர்க்கோன்
கலியன்ஒலிசெய் தமிழ்மாலை வல்லார் *
கண்டார்வணங்கக் களியானைமீதே
கடல்சூழுலகுக்கு ஒருகாவலராய் *
விண்தோய் நெடுவெண்குடை நீழலின்கீழ்
விரிநீருலகாண்டு விரும்புவரே. (2)