O Lord! What Do You Intend to Do Regarding My Daughter?
பிரானே! என் மகள் திறத்தே என்ன செய்யப்போகிறாய்?
1113 தன்குடிக்குஏதும் தக்கவாநினையாள்
தடங்கடல்நுடங்கெயிலிலங்கை *
வன்குடிமடங்கவாளமர்தொலைத்த
வார்த்தைகேட்டு இன்புறும்மயங்கும் *
மின்கொடிமருங்குல் சுருங்கமேல்நெருங்கி
மென்முலைபொன்பயந்திருந்த *
என்கொடியிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!