For Those Who Sing These Verses, Old Karmas Will Vanish
இவற்றைப் பாடுவோர் பழவினை நீங்கும்
1117 அன்னமும்மீனும் ஆமையும்அரியும்
ஆயஎம்மாயனே! அருளாய் *
என்னும்இன்தொண்டர்க்கு இன்னருள்புரியும்
இடவெந்தை எந்தைபிரானை *
மன்னுமாமாடமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
பன்னியபனுவல்பாடுவார் நாளும்
பழவினைபற்றறுப்பாரே. (2)