The Place for the Great Lord is Tirunīrmalai
நெடுமாலுக்கு இடம் திருநீர்மலை
1083 பாராருலகும்பனிமால்வரையும்
கடலும்சுடரும்இவையுண்டும் * எனக்கு
ஆராதெனநின்றவன்எம்பெருமான்
அலைநீருலகுக்கு அரசாகிய * அப்
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லைநுனக்கெனும்எல்லையினான் *
நீரார்பேரான்நெடுமாலவனுக்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே.