Sing These Verses: One Can Rule the World of the Devas.
இவற்றைப் பாடுக: தேவருலகை ஆளலாம்
1991 கொலைகெழுசெம்முகத்தகளிறொன்றுகொன்று
கொடியோனிலங்கைபொடியா *
சிலைகெழுசெஞ்சரங்கள்செலவுய்த்த நங்கள்
திருமாலை, வேலைபுடைசூழ் *
கலிகெழுமாடவீதி வயல்மங்கைமன்னு
கலிகன்றிசொன்னபனுவல் *
ஒலிகெழுபாடல் பாடியுழல்கின்றதொண்டரவர்
ஆள்வர்உம்பருலகே. (2)