PT 10.9.8

கவுள் கொண்ட நீர் போல் இவளை நினைக்கிறாயே!

1939 பொருந்தலன்ஆகம்புள்ளுவந்தேற
வள்ளுகிரால்பிளந்து * அன்று
பெருந்தகைக்கிரங்கிவாலியைமுனிந்த
பெருமைகொலோ? செய்ததின்று *
பெருந்தடங்கண்ணிசுரும்புறுகோதை
பெருமையை நினைந்திலைபேசில் *
கருங்கடல்வண்ணா! கவுள்கொண்டநீராம்
இவளெனக்கருதுகின்றாயே.
1939 pŏruntalaṉ ākam pul̤ uvantu eṟa *
val̤ ukirāl pil̤antu * aṉṟu
pĕruntakaikku iraṅki vāliyai muṉinta *
pĕrumaikŏlo cĕytatu iṉṟu? **
pĕrun taṭaṅ kaṇṇi curumpu uṟu kotai *
pĕrumaiyai niṉaintilai pecil *
karuṅ kaṭal vaṇṇā kavul̤ kŏṇṭa nīr ām *
ival̤ ĕṉak karutukiṉṟāye-8

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1939. Her mother says, “You, colored like the dark ocean, have not thought of the pride of my daughter whose eyes are beautiful and whose garlanded hair swarms with bees. Why did you do this? It is because you are proud that you split open the chest of Hiranyan, your enemy, and because you became angry at Vāli and killed him when you felt compassion for Sugreeva? Do you think my daughter is only like the moisture that comes inside your mouth in your cheek?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அன்று முன்பு பகைவனான; பொருந்தலன் இரணியனின்; ஆகம் சரீரத்திலே; புள் கழுகு போன்ற பறவைகள்; உவந்து உவந்து; ஏற ஏறி உண்ணும்படியாக; வள் கூர்மையான; உகிரால் நகங்களாலே; பிளந்து பிளந்தவனும்; பெரும் பெருந்தன்மை வாய்ந்த; தகைக்கு ஸுக்ரீவனுக்கு; இரங்கி அருள் கூர்ந்து; வாலியை வாலியை; முனிந்த முடித்தோமென்கிற; பெருமை பெருமையை மிடுக்கை; கொலோ? நினைத்தோ?; இன்று இவளை எளியவளாக; செய்தது நினைப்பது; பெரும் தடம் பரந்த பெரும்; கண்ணி கண்களையுடைய; சுரும்பு வண்டு; உறு படியும் கூந்தலையுடைய; கோதை இப்பெண்ணின்; பெருமையை பெருமையை; நினைந்திலை பேசில் உணராமல் பேச; கவுள் கொண்ட வாயில் கொண்ட; நீர் ஆம் நீரை கொப்பளிப்பதும் பருகுவதும் போல; இவள் என இவள் என்று; கருங் கடல் வண்ணா கருமையான கடல் போன்ற வண்ணத்தை உடையவனே; கருதுகின்றாயே கருதுகின்றாயோ?

Āchārya Vyākyānam

(நீ உன் பெண்ணை கோழி வெண் முட்டையாக நினைத்து இருக்கிறாய் அவள் என்னை எப்போதும் மறந்தேன் இரும்பு முட்டை போல் சொல்லத்தக்கது எல்லாம் சொல்லி சொல்லக் கூடாதாவற்றச் சொன்னாளே இதுக்கு -சிறுக்கனுக்கு உதவினேன் -சமய ஸமுத்பவம் -ஸ்தவம் -தோன்றினேன் ஒரு குரங்குக்கு உதவினேன் -தேடிப் போய் உதவினேன் -சொல்ல ஆஸ்ரித பவ்யனாகி ல் நான் பிரார்த்திக்கும் படி -வேண்டும் படி -இப்படி உதாசீனப்படுத்தலாமோ

+ Read more