O Kaṇṇa! Why the Delay? Come Running.
கண்ணா! காலம் தாழ்த்துவது ஏன்? ஓடி வா
1886 பெற்றத்தலைவன்எங்கோமான் பேரருளாளன்மதலாய்! *
சுற்றக்குழாத்திளங்கோவே! தோன்றியதொல்புகழாளா! *
கற்றினந்தோறும்மறித்துக் கானம்திரிந்தகளிறே! *
எற்றுக்கென்அம்மமுண்ணாதே எம்பெருமான்! இருந்தாயே?