Chapter 3

Kuzhamani thuram - (ஏத்துகின்றோம் நாத்)

குழமணிதூரம்
Kuzhamani thuram - (ஏத்துகின்றோம் நாத்)
The dance performed by the defeated demons seeking refuge is known as "Kuzha Maṇi." This type of dance, performed in response to their defeat in battle, is danced upside down. The verses in this section are structured as if they are the songs of the demons performing this inverted dance, acknowledging their defeat and seeking refuge in Lord Rama.
போரில் தோல்வியடைந்த அரக்கர் அடைக்கலம் வேண்டி ஆடும் கூத்து. போரில் தோற்றவர்கள் தங்கள் தோல்விக்கு ஈடாக ஆடும் ஒரு வகைக் கூத்து குழமணி எனப் பெயர் கொண்டதாகும். இது தலைகீழாக ஆடப்படும் கூத்து. அவ்வகையில் கூத்தாடுகின்ற அரக்கர்கள் கூறும் பாசுரங்களாக அமைந்தது இப்பதிகம்.
Verses: 1868 to 1877
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 10.3.1

1868 ஏத்துகின்றோம்நாத்தழும்ப இராமன்திருநாமம் *
சோத்தநம்பீ! சுக்கிரீவா! உம்மைத்தொழுகின்றோம் *
வார்த்தைபேசீர்எம்மை உங்கள்வானரம்கொல்லாமே *
கூத்தர்போலஆடுகின்றோம் குழமணிதூரமே. (2)
1868 ## ஏத்துகின்றோம் நாத் தழும்ப * இராமன் திருநாமம் *
சோத்தம் நம்பீ சுக்கிரீவா * உம்மைத் தொழுகின்றோம் **
வார்த்தை பேசீர் எம்மை * உங்கள் வானரம் கொல்லாமே *
கூத்தர் போல ஆடுகின்றோம் * குழமணிதூரமே 1
1868 ## ettukiṉṟom nāt tazhumpa * irāmaṉ tirunāmam *
cottam nampī cukkirīvā * ummait tŏzhukiṉṟom **
vārttai pecīr ĕmmai * uṅkal̤ vāṉaram kŏllāme *
kūttar pola āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-1

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1868. “We praise the divine name of Rāma. O Nambi, we bow to you, O Sugriva, we worship you. Protect us, tell your monkey army not to hurt us. We dance like dancers of the kuthu dance. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமன் இராமனின்; திருநாமம் சக்கரவர்த்தித் திருமகனின் திருநாமத்தை; நாத் தழும்ப நாக்கில் தழும்பு ஏறுமளவு; ஏத்துகின்றோம் துதிக்கின்றோம்; நம்பீ! சுக்கிரீவா! நம்பீ! சுக்கிரீவா; சோத்தம் அஞ்ஜலி செய்கிறோம்; உம்மைத் உம்மை; தொழுகின்றோம் தொழுகின்றோம்; உங்கள் வானரம் உங்கள் வானரர்கள்; எம்மை எங்களை; கொல்லாமே கொல்லாமலிருக்க எங்களிடம்; வார்த்தை ஒருவார்த்தை; பேசீர் பேசி அருள வேண்டும் நாங்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும்; கூத்தர் போல தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்

PT 10.3.2

1869 எம்பிரானே! என்னையாள்வாய்! என்றென்றுஅலற்றாதே *
அம்பின்வாய்ப்பட்டாற்றகில்லாது இந்திரசித்தழிந்தான் *
நம்பிஅநுமா! சுக்கிரீவ! அங்கதனே! நளனே! *
கும்பகர்ணன்பட்டுப்போனான் குழமணிதூரமே.
1869 எம்பிரானே என்னை ஆள்வாய் * என்று என்று அலற்றாதே *
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது * இந்திரசித்து அழிந்தான் **
நம்பி அநுமா சுக்கிரீவா * அங்கதனே நளனே *
கும்பகர்ணன் பட்டுப்போனான் * குழமணிதூரமே 2
1869 ĕmpirāṉe ĕṉṉai āl̤vāy * ĕṉṟu ĕṉṟu alaṟṟāte *
ampiṉ vāyppaṭṭu āṟṟakillātu * intiracittu azhintāṉ **
nampi anumā cukkirīvā * aṅkataṉe nal̤aṉe *
kumpakarṇaṉ paṭṭuppoṉāṉ- * kuzhamaṇitūrame-2

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1869. “Indrajit did not praise the name of the god. He said, ‘Our dear king, take care me. ’ He could not fight with Rāma and was killed by Rāma’s arrows. O Nambi Hanuman! Sugriva! Angada! Nala! Kumbhakarna lost and was killed in the war. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்திரசித்து இந்திரஜித்தானவன்; எம்பிரானே! எம் ராமபிரானே!; என்னை என்னை; ஆள்வாய்! என்று ஆட்கொள்வாய் என்று; என்று அலற்றாதே வணங்கிப் பணியாமல்; அம்பின் வாய்ப்பட்டு அம்புக்கு இறையாகி; ஆற்றகில்லாது தரித்திருக்க மாட்டாமல்; அழிந்தான் முடிந்து போனான்; நம்பி அநுமா! நம்பி அநுமனே!; சுக்கிரீவா! சுக்கிரீவனே!; அங்கதனே! நளனே! அங்கதனே! நளனே!; கும்பகர்ணன் கும்பகர்ணனும்; பட்டுப் போனான் முடிந்து போனான் நாங்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்

PT 10.3.3

1870 ஞாலமாளும்உங்கள்கோமான் எங்களிராவணற்கு *
காலனாகிவந்தவாகண்டு அஞ்சிக்கருமுகில்போல் *
நீலன்வாழ்கசுடேணன்வாழ்க அங்கதன்வாழ்கவென்று *
கோலமாகஆடுகின்றோம் குழமணிதூரமே.
1870 ஞாலம் ஆளும் உங்கள் கோமான் * எங்கள் இராவணற்கு *
காலன் ஆகி வந்தவா * கண்டு அஞ்சிக் கரு முகில்போல் **
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க * அங்கதன் வாழ்க என்று *
கோலம் ஆக ஆடுகின்றோம் * குழமணிதூரமே 3
1870 ñālam āl̤um uṅkal̤ komāṉ * ĕṅkal̤ irāvaṇaṟku *
kālaṉ āki vantavā * kaṇṭu añcik karu mukilpol **
nīlaṉ vāzhka cuṭeṇaṉ vāzhka * aṅkataṉ vāzhka ĕṉṟu *
kolam āka āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-3

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1870. “O Rāma! You came to the earth as a Yama for our king Rāvana, the ruler of Lankā. May the dark cloud-like Neelan live long! May Sushenan live long. May Angadan live long. We praise all of you and dance beautifully. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஞாலம் ஆளும் உலகத்தை ஆளும்; உங்கள் கோமான் உங்கள் அரசன்; எங்கள் எங்கள் அரசன்; இராவணற்கு இராவணற்கு; காலன் ஆகி வந்தவா யமனாக வந்ததை; கண்டு அஞ்சி பார்த்து பயந்து; கரு முகில் போல் கருத்த மேகம் போன்ற; நீலன் வாழ்க! நீலன் வாழ்க; சுடேணன் வாழ்க! ஸுஷேணன் வாழ்க; அங்கதன் வாழ்க! என்று அங்கதன் வாழ்க! என்று; கோலம் ஆக கோலாகலமாக நாங்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்

PT 10.3.4

1871 மணங்கள்நாறும்வார்குழலார் மாதர்களாதரத்தை *
புணர்ந்தசிந்தைப்புன்மையாளன் பொன்றவரிசிலையால் *
கணங்களுண்ணவாளியாண்ட காவலனுக்கிளையோன் *
குணங்கள்பாடிஆடுகின்றோம் குழமணிதூரமே.
1871 மணங்கள் நாறும் வார் குழலார் * மாதர்கள் ஆதரத்தை *
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் * பொன்ற வரி சிலையால் **
கணங்கள் உண்ண வாளி ஆண்ட * காவலனுக்கு இளையோன் *
குணங்கள் பாடி ஆடுகின்றோம் * குழமணிதூரமே 4
1871 maṇaṅkal̤ nāṟum vār kuzhalār * mātarkal̤ ātarattai *
puṇarnta cintaip puṉmaiyāl̤aṉ * pŏṉṟa vari cilaiyāl **
kaṇaṅkal̤ uṇṇa vāl̤i āṇṭa * kāvalaṉukku il̤aiyoṉ *
kuṇaṅkal̤ pāṭi āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-4

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1871. “Evil-minded Rāvana desired fragrant-haired Sita and Rāma killed him. We praise the younger brother of Rāma, Lakshmana, valorous in victory, who killed the Rākshasas by bending his bow and leaving them for the ghouls on the battlefield to eat. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணங்கள் நாறும் மணம் மிக்க; வார் குழலார்கள் நீண்ட கூந்தலையுடைய; மாதர்கள் பெண்கள் விஷயத்தில்; ஆதரத்தை ஆசையை; புணர்ந்த சிந்தை விடாத மனமுடைய; புன்மையாளன் நீசனான இராவணன்; பொன்ற அழியும்படியும்; கணங்கள் உண்ண பேய் பிசாசுகள் உண்ண; வரி சிலையால் அழகிய வில்லிலே; வாளி ஆண்ட அம்புகளைப் பிரயோகித்த; காவலனுக்கு எம்பெருமானின்; இளையோன் தம்பி லக்ஷ்மணனின்; குணங்கள் பாடி குணங்களைப் பாடி நாங்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்

PT 10.3.5

1872 வென்றிதந்தோம்மானம்வேண்டோம் தானம்எமக்காக *
இன்றுதம்மின்எங்கள்வாணாள் எம்பெருமான்தமர்காள்! *
நின்றுகாணீர்கண்களார நீர்எம்மைக்கொல்லாதே *
குன்றுபோலஆடுகின்றோம் குழமணிதூரமே.
1872 வென்றி தந்தோம் மானம் வேண்டோம் * தானம் எமக்கு ஆக *
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் * எம் பெருமான் தமர்காள் **
நின்று காணீர் கண்கள் ஆர * நீர் எம்மைக் கொல்லாதே *
குன்று போல ஆடுகின்றோம் * குழமணிதூரமே 5
1872 vĕṉṟi tantom māṉam veṇṭom * tāṉam ĕmakku āka *
iṉṟu tammiṉ ĕṅkal̤ vāzhnāl̤ * ĕm pĕrumāṉ-tamarkāl̤ **
niṉṟu kāṇīr kaṇkal̤ āra * nīr ĕmmaik kŏllāte *
kuṉṟu pola āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-5

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1872. “We lost the war and do not need any honor. Give us your grace today and our lives. You are our lords and relatives. Look at us. Do not kill us. We are big as mountains, and we dance for you. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் பெருமான் ராம பக்தர்களான; தமர்காள்! வாநர வீரர்களே!; வென்றி வெற்றியை உங்களுக்கு; தந்தோம் கொடுத்தோம்; மானம் வேண்டோம் கர்வத்தைக் கைவிட்டோம்; எங்கள் வாழ் நாள் எங்களுடைய ஆயுளை; தானம் எமக்காக தானமாக எங்களுக்கு; இன்று தம்மின் கொடுத்து விடுங்கள்; நீர் எம்மை நீங்கள் எங்களை; கொல்லாதே கொல்லாமல்; குன்று போல குன்று போல்; ஆடுகின்றோம் நின்று நாங்கள் ஆடும்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; கண்கள் ஆர கண்ணார; நின்று காணீர் கண்டு களியுங்கள்

PT 10.3.6

1873 கல்லின்முந்நீர்மாற்றிவந்து காவல்கடந்து * இலங்கை
அல்லல்செய்தான்உங்கள்கோமான் எம்மைஅமர்க்களத்து *
வெல்லகில்லாதுஅஞ்சினோங்காண் வெங்கதிரோன்சிறுவா! *
கொல்லவேண்டாஆடுகின்றோம் குழமணிதூரமே.
1873 கல்லின் முந்நீர் மாற்றி வந்து * காவல் கடந்து * இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் * எம்மை அமர்க்களத்து **
வெல்லகில்லாது அஞ்சினோம்காண் * வெம் கதிரோன் சிறுவா *
கொல்லவேண்டா ஆடுகின்றோம் * குழமணிதூரமே 6
1873 kalliṉ munnīr māṟṟi vantu * kāval kaṭantu * ilaṅkai
allal cĕytāṉ uṅkal̤ komāṉ * ĕmmai amarkkal̤attu **
vĕllakillātu añciṉomkāṇ * vĕm katiroṉ ciṟuvā *
kŏllaveṇṭā āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-6

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1873. “Your king constructed a bridge of stones across the ocean, went past all our guards and came to Lankā, afflicting us. We could not fight and conquer him. We are afraid of him. You are the son of hot sun. Do not kill us. We dance for you and ask your grace. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உங்கள் கோமான் உங்கள் மன்னன் ராமபிரான்; கல்லின் முந்நீர் மலைகளால் கடலில்; மாற்றி அணைகட்டி; இலங்கை இலங்கையிலுள்ள; காவல் அரண்களை; கடந்து வந்து கடந்து வந்து; அமர்க்களத்து யுத்தபூமியில்; எம்மை எங்களை; அல்லல் செய்தான் துன்புறுத்தினான்; வெம் கதிரோன் ஸூரியனின் புத்ரனான; சிறுவா! ஸுக்ரீவனே!; வெல்லகில்லாது உங்களை வெல்ல முடியாமல்; அஞ்சினோம் காண் பயப்படுகின்றோம்; கொல்லவேண்டா எங்களைக் கொல்லாதீர்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் நாங்கள் ஆடுகின்றோம்

PT 10.3.7

1874 மாற்றமாவதுஇத்தனையே வம்மின்அரக்கருள்ளீர்! *
சீற்றம்நும்மேல்தீரவேண்டில் சேவகம்பேசாதே *
ஆற்றல்சான்றதொல்பிறப்பில் அநுமனைவாழ்கவென்று *
கூற்றமன்னார்காண ஆடீர் குழமணிதூரமே.
1874 மாற்றம் ஆவது இத்தனையே * வம்மின் அரக்கர் உள்ளீர் *
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் * சேவகம் பேசாதே **
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் * அநுமனை வாழ்க என்று *
கூற்றம் அன்னார் காண ஆடீர் * குழமணிதூரமே 7
1874 māṟṟam āvatu ittaṉaiye * vammiṉ arakkar ul̤l̤īr *
cīṟṟam nummel tīra veṇṭiṉ * cevakam pecāte **
āṟṟal cāṉṟa tŏl piṟappil * anumaṉai vāzhka ĕṉṟu *
kūṟṟam aṉṉār kāṇa āṭīr- * kuzhamaṇitūrame-7

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1874. “O Rākshasas, come, give up your thoughts of fighting with the monkeys. If you want Rāma and the others not to be angry with you do not speak heroic words. Heroic Hanuman has an ancient birth—let us praise him. Let us dance so that the monkey heroes who are as strong as Yama’s messengers can see us. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரக்கர் உள்ளீர்! அரக்கர்களே!; வம்மின் வாருங்கள் என்று மற்ற அரக்கர்களை; மாற்றம் ஆவது மாற்றத்துக்கு நீங்களும்; இத்தனையே எங்களைப் போல் சரணமடையுங்கள்; சீற்றம் நும்மேல் உங்கள் மேலுள்ள கோபம்; தீர வேண்டின் தீர வேண்டுமானால்; சேவகம் பேசாதே வீரம் பேசாமல்; தொல் பிறப்பின் பிறப்பிலிருந்தே; ஆற்றல் சான்ற வலிமையுடைய; அநுமனை வாழ்க என்று அநுமனை வாழ்க என்று; கூற்றம் அன்னார் யமனைப் போன்ற வானரர்கள்; காண கண்டு களிக்க; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடீர் ஆடுங்கள்

PT 10.3.8

1875 கவளயானைபாய்புரவி தேரோடரக்கரெல்லாம்
துவள * வென்றவென்றியாளன்தன் தமர்கொல்லாமே *
தவளமாடம்நீடயோத்திக் காவலன்தன்சிறுவன் *
குவளைவண்ணன்காண ஆடீர் குழமணிதூரமே.
1875 கவள யானை பாய் புரவி * தேரொடு அரக்கர் எல்லாம்
துவள * வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே **
தவள மாடம் நீடு அயோத்திக் * காவலன் தன் சிறுவன் *
குவளை வண்ணன் காண ஆடீர் * குழமணிதூரமே 8
1875 kaval̤a yāṉai pāy puravi * terŏṭu arakkar ĕllām
tuval̤a * vĕṉṟa vĕṉṟiyāl̤aṉ-taṉ tamar kŏllāme **
taval̤a māṭam nīṭu ayottik * kāvalaṉ-taṉ ciṟuvaṉ *
kuval̤ai vaṇṇaṉ kāṇa āṭīr- * kuzhamaṇitūrame-8

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1875. “The monkey army of Rāma, after wearing us down and conquering us, should not kill our elephants that eat so well or our galloping horses. They should not destroy our chariots or the Rākshasas. Let the dark kuvalai-colored Rāma, the king of Ayodhya surrounded with tall coral-studded palaces see us. Let us dance. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கவள யானை கவளங்கொள்ளும் யானைகளோடும்; பாய் புரவி பாய்ந்து வரும் குதிரைகளோடும்; தேரொடு தேரொடும்; அரக்கர் எல்லாம் அரக்கர்கள் எல்லாம்; துவள துவண்டு போகும்படி; வென்ற வெற்றி கொண்ட; வென்றியாளன் தன் பெருமானின்; தமர் கிங்கரர்களான வானரவீரர்கள்; கொல்லாமே கொல்லாதபடி; தவள நீடு வெண்மையான நீண்ட; மாடம் மாடமாளிகையுள்ள; அயோத்தி அயோத்திமா நகர்க்கு; காவலன் தன் அரசரான தசரதனின்; சிறுவன் புதல்வன் ராமன்; குவளை குவளை மலர்போன்ற; வண்ணன் நிறத்தையுடைய பெருமான்; காண கண்டு களிக்க; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடீர் ஆடுங்கள்

PT 10.3.9

1876 ஏடொத்தேந்தும்நீளிலைவேல் எங்களிராவணனார்
ஓடிப்போனார் * நாங்கள்எய்த்தோம் உய்வதோர்காரணத்தால் *
சூடிப்போந்தோம்உங்கள்கோமானாணை தொடரேன்மின் *
கூடிக்கூடிஆடுகின்றோம் குழமணிதூரமே.
1876 ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் * எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் * நாங்கள் எய்த்தோம் * உய்வது ஓர் காரணத்தால் **
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் * ஆணை தொடரேன்மின் *
கூடிக் கூடி ஆடுகின்றோம் * குழமணிதூரமே 9
1876 eṭu ŏttu entum nīl̤ ilai vel * ĕṅkal̤ irāvaṇaṉār
oṭippoṉār * nāṅkal̤ ĕyttom * uyvatu or kāraṇattāl **
cūṭip pontom uṅkal̤ komāṉ * āṇai tŏṭareṉmiṉ *
kūṭik kūṭi āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-9

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1876. “Our king Rāvana carried a long spear with a leaf-shaped blade and ran from the battlefield. We wanted to survive and have come to you. We will not fight with your king or with all of you. Together as a group we dance. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏடு ஒத்து பனை ஓலை போல் அகன்றதாயும்; நீள் நீண்டதாயும் இருக்கும்; இலை இலை போல் உள்ள; வேல் வேல்படையை; ஏந்தும் கையிலுடைய; எங்கள் இராவணனார் எங்கள் இராவணனார்; ஓடிப்போனார் முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார்; நாங்கள் எய்த்தோம் நாங்களோ இளைத்தோம்; உய்வது ஓர் உய்வதற்கோர்; காரணத்தால் வழியில்லாமல்; உங்கள் கோமான் உங்கள் ராமனின்; ஆணை ஆணைக்கு; சூடிப் போந்தோம் பணிந்தோம்; தொடரேல்மின் எங்களைக் கொல்லாதீர்கள்; கூடி கூடி திரள் திரளாகக் கூடி கூடி; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும்; கூத்தர் போல தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்

PT 10.3.10

1877 வென்றதொல்சீர்த்தென்னிலங்கை வெஞ்சமத்து * அன்றரக்கர்
குன்றமன்னார்ஆடியுய்ந்த குழமணிதூரத்தை *
கன்றிநெய்ந்நீர்நின்றவேற்கைக் கலியனொலிமாலை *
ஒன்றுமொன்றுமைந்தும்மூன்றும் பாடிநின்றாடுமினே. (2)
1877 ## வென்ற தொல் சீர்த் தென் இலங்கை * வெம் சமத்து * அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த * குழமணிதூரத்தை **
கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் * கலியன் ஒலிமாலை *
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் * பாடிநின்று ஆடுமினே 10
1877 ## vĕṉṟa tŏl cīrt tĕṉ ilaṅkai * vĕm camattu * aṉṟu arakkar
kuṉṟam aṉṉār āṭi uynta * kuzhamaṇitūrattai **
kaṉṟi nĕyn nīr niṉṟa vel kaik * kaliyaṉ ŏlimālai *
ŏṉṟum ŏṉṟum aintum mūṉṟum * pāṭiniṉṟu āṭumiṉe-10

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1877. Kaliyan with a spear smeared with oil composed a garland of ten musical pāsurams in which the mountain-like Rakshasās exclaimed, “kuzhamani thuuram” after fighting a cruel war in famed ancient Lankā with Rāma and the monkeys. Sing these ten pāsurams and dance.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொல் நெடுநாளாக; வென்ற சீர் வெற்றியே இயல்பாக; தென்இலங்கை இருந்த தென்னிலங்கையில்; வெம் சமத்து போர்க்களத்தில்; அன்று குன்றம் மன்னார் அன்று மலைபோன்ற; அரக்கர் ஆடி உய்ந்த அரக்கர்கள் ஆடி உய்ந்த; குழமணி தூரத்தை குழமணி கூத்தைக் குறித்து; கன்றி எதிரிகளின் ரத்தக் கரையால் கோபமுற்ற; நெய்ந்நீர் நின்ற நெய்யிட்டிருக்கும்; வேல் கை வேலைக் கையிலுடையவரான; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த; ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பத்து; பாடி நின்று பாசுரங்களையும் பாடிக்கொண்டு; ஆடுமினே நீங்களும் உய்ய ஆடுவீர்களாக