PT 1.5.5

ஆநிரை காத்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்

992 அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கு அயில்வாளால்
விடுத்தான் * விளங்குசுடராழி விண்ணோர்பெருமான் நண்ணார்முன் *
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தி இனநிரைக்காத்
தடுத்தான் * தடம்சூழ்ந்துஅழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.5
992 aṭuttu ārttu ĕzhuntāl̤ pila vāy viṭṭu alaṟa * aval̤ mūkku ayil vāl̤āl
viṭuttāṉ * vil̤aṅku cuṭar āzhi * viṇṇor pĕrumāṉ naṇṇār muṉ **
kaṭuttu ārttu ĕzhunta pĕru mazhaiyaik * kal ŏṉṟu enti iṉa niraik kāt
taṭuttāṉ * taṭam cūzhntu azhaku āya * cāl̤akkirāmam aṭai nĕñce-5 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

992. When Surpaṇaka came roaring with a mouth wide like a cave, He struck her down, slicing her nose with His sharp, shining sword. Wielder of the blazing chakra and the Lord of the eternal Nityasuris, He once lifted the Govardhana hill to shield the cows from the storm unleashed by Indra’s pride. He now dwells in Śālagrāmam, that beautiful land ringed with ponds. Go, O heart! Reach that sacred place!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடுத்து ஆர்த்து ஆரவாரத்துடன்; எழுந்தாள் வந்த சூர்ப்பணகை; பில குகை போன்ற; வாய் விட்டு வாயைத்திறந்து கொண்டு; அலற அவள் கதறும்படியாக அவளுடைய; மூக்கு மூக்கை; அயில் வாளால் கூர்மையான வாளாலே; விடுத்தான் அறுத்தவனும்; விளங்கு ஒளியுடைய; சுடர் ஆழி சக்கரத்தையுடையவனும்; விண்ணோர் நித்ய ஸூரிகளுக்கு; பெருமான் தலைவனும்; கடுத்து வேகமாக; ஆர்த்து எழுந்த பேரொலியுடன் எழுந்து; பெரு மழையை பொழிந்த பெரு மழையை; நண்ணார் முன் இந்திராதிகள் முன்பு; இன நிரை பசுக்கூட்டங்களை காப்பாற்ற; கல் கோவர்த்தனமென்னும்; ஒன்று ஏந்தி காத்து ஒரு மலையை தூக்கி காத்து; தடுத்தான் மழையைத் தடுத்த பெருமான் இருக்குமிடம்; தடம் தடாகங்களால்; சூழ்ந்து அழகு ஆய சூழப்பெற்ற அழகிய; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
aduththu approached; ārththu making noise; ezhundhāl̤ sūrpaṇakā who came with śeal; pilam like a cave; vāy vittu opening her mouth; alaṛa to cry out; aval̤ her; mūkku nose; ayil sharp; vāl̤āl with a sword; viduththān one who severed (with the help of il̤aiya perumāl̤); vil̤angu very shining; sudar have radiance; āzhi one who is having thiruvāzhi (divine chakra); viṇṇŏr for nithyasūris; perumān being the lord; kaduththu with great speed; ārththu making an uproarious sound; ezhundha appeared; peru mazhaiyai great rain; naṇṇār mun in front of indhra et al who opposed; inam herd; niraikkā to protect the cows; kal onṛu mountain named gŏvardhan; ĕndhi held; thaduththān stopped, the abode where he is eternally residing; thadam sūzhndhu surrounded by ponds; azhagāya beautiful; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṛeach such ṣrī sāl̤agrāmam.