Chapter 5

Sālakkiramam (Mukthinath) - (கலையும் கரியும்)

திருச்சாளக்கிராமம்
Sālakkiramam (Mukthinath) - (கலையும் கரியும்)
Rama resides in Salagrama. The Lord who lives in Uragam, Thirukkudanthai, and Thiruppernagar is also present here. Serve Him and attain salvation, says the āzhvār. In Salagrama, the Lord is present in the form of holy water.
இராமன் வாழுமிடம் சாளக்கிராமம். ஊரகம், திருக்குடந்தை, திருப்பேர்நகர் ஆகிய இடங்களில் வாழ்பவனே இங்குள்ளான். அவனை ஸேவித்து உய்வு பெறுங்கள் என்கிறார் ஆழ்வார். சாளக்கிராமத்தில் பகவான் தீர்த்தரூபியாக இருக்கிறான்.
Verses: 988 to 997
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: செந்திருத்தி
Recital benefits: Will rule the world of Gods
  • PT 1.5.1
    988 ## கலையும் கரியும் பரிமாவும் * திரியும் கானம் கடந்து போய் *
    சிலையும் கணையும் துணையாகச் * சென்றான் வென்றிச் செருக்களத்து **
    மலை கொண்டு அலை நீர் அணை கட்டி * மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
    தலைவன் * தலை பத்து அறுத்து உகந்தான் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 1 **
  • PT 1.5.2
    989 கடம் சூழ் கரியும் பரிமாவும் * ஒலி மாத் தேரும் காலாளும் *
    உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை * பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான் **
    இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் * இமையோர் வணங்க மணம் கமழும் *
    தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய * சாளக்கிராமம் அடை நெஞ்சே 2 **
  • PT 1.5.3
    990 உலவு திரையும் குல வரையும் * ஊழி முதலா எண் திக்கும் *
    நிலவும் சுடரும் இருளும் ஆய் * நின்றான் வென்றி விறல் ஆழி
    வலவன் ** வானோர் தம் பெருமான் * மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
    சலவன் * சலம் சூழ்ந்து அழகு ஆய * சாளக்கிராமம் அடை நெஞ்சே 3 **
  • PT 1.5.4
    991 ஊரான் குடந்தை உத்தமன் * ஒரு கால் இரு கால் சிலை வளைய *
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் * வற்றா வரு புனல் சூழ்
    பேரான் ** பேர் ஆயிரம் உடையான் * பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
    தாரான் * தாரா வயல் சூழ்ந்த * சாளக்கிராமம் அடை நெஞ்சே 4 **
  • PT 1.5.5
    992 அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற * அவள் மூக்கு அயில் வாளால்
    விடுத்தான் * விளங்கு சுடர் ஆழி * விண்ணோர் பெருமான் நண்ணார் முன் **
    கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் * கல் ஒன்று ஏந்தி இன நிரைக் காத்
    தடுத்தான் * தடம் சூழ்ந்து அழகு ஆய * சாளக்கிராமம் அடை நெஞ்சே 5 **
  • PT 1.5.6
    993 தாய் ஆய் வந்த பேய் உயிரும் * தயிரும் விழுதும் உடன் உண்ட
    வாயான் * தூய வரி உருவின் குறளாய்ச் சென்று * மாவலியை
    ஏயான் இரப்ப ** மூவடி மண் இன்றே தா என்று * உலகு ஏழும்
    தாயான் * காயா மலர் வண்ணன் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 6
  • PT 1.5.7
    994 ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் * அரி ஆய்ப் பரிய இரணியனை *
    ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த * ஒருவன் தானே இரு சுடர் ஆய் **
    வான் ஆய்த் தீ ஆய் மாருதம் ஆய் * மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
    தான் ஆய் * தானும் ஆனான் தன் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 7 **
  • PT 1.5.8
    995 வெந்தார் என்பும் சுடு நீறும் * மெய்யில் பூசி கையகத்து * ஓர்
    சந்து ஆர் தலைகொண்டு * உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று ** என்
    எந்தாய் சாபம் தீர் என்ன * இலங்கு அமுது நீர் திருமார்வில்
    தந்தான் * சந்து ஆர் பொழில் சூழ்ந்த * சாளக்கிராமம் அடை நெஞ்சே 8 **
  • PT 1.5.9
    996 தொண்டு ஆம் இனமும் இமையோரும் * துணை நூல் மார்பின் அந்தணரும் *
    அண்டா எமக்கே அருளாய் என்று * அணையும் கோயில் அருகு எல்லாம் **
    வண்டு ஆர் பொழிலின் பழனத்து * வயலின் அயலே கயல் பாய *
    தண் தாமரைகள் முகம் அலர்த்தும் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 9 **
  • PT 1.5.10
    997 ## தாரா ஆரும் வயல் சூழ்ந்த * சாளக்கிராமத்து அடிகளை *
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் * கலியன் ஒலிசெய் தமிழ்மாலை **
    ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் * அமரர் நல் நாட்டு அரசு ஆள *
    பேர் ஆயிரமும் ஓதுமின்கள் * அன்றி இவையே பிதற்றுமினே 10 **