PMT 8.7

அயோத்தி மன்னனே! தாலேலோ

725 ஆலினிலைப்பாலகனாய் அன்றுலகமுண்டவனே! *
வாலியைக்கொன்று அரசுஇளையவானரத்துக்களித்தவனே! *
காலின்மணிகரையலைக்கும் கணபுரத்தென்கருமணியே! *
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.
725 āliṉ ilaip pālakaṉāy * aṉṟu ulakam uṇṭavaṉe *
vāliyaik kŏṉṟu aracu * il̤aiya vāṉarattukku al̤ittavaṉe **
kāliṉ maṇi karai alaikkum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
āli nakarkku atipatiye * ayottimaṉe tālelo (7)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

725. You floated on a banyan leaf when you were a baby,. swallowed the earth, killed Vali and gave the kingdom to his younger brother Sugrivan. You are the dark jewel of Kannapuram where the wind makes the waves bring jewels to the banks of the rivers. You are the king of Thiruvāli. You are the king of Ayodhya, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு; ஆலின் இலை ஓர் ஆலந்தளிரிலே; பாலகனாய் குழந்தை வடிவாய் இருந்து; உலகம் உலகத்தை; உண்டவனே! உண்டு காத்தவனே!; வாலியைக்கொன்று வாலியை அழித்து; இளைய அவனது தம்பியான; வானரத்துக்கு சுக்ரீவனுக்கு; அரசு அளித்தவனே ராஜ்யத்தைக் தந்தவனே!; காலின் மணி காற்றடித்து விழும் மணிகளை; கரை அலைக்கும் கரையிலே சேர்க்கும்; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; ஆலி நகர்க்கு திருவாலி நகர்க்கு; அதிபதியே! தலைவனே!; அயோத்திமனே! அயோத்தியின் அரசனே!; தாலேலோ! தாலேலோ