Henceforth, We Shall Suffer No Sorrow
இனித் துயரம் அடையோம்
749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று
செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்
தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *
திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
உறைவானை * மறவாதவுள்ளந்தன்னை
உடையோம் * மற்றுறுதுயர மடையோமின்றே.