They Shall Attain the Holy Feet of Nārāyaṇa
நாராயணன் திருவடியைச் சேர்வர்
751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை *
எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *
கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த *
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)