PMT 10.1

When Shall I See My Lord at Citrakūṭa!

சித்திரகூடத்தே எம்பெருமானை எப்போது காண்பேனோ!

741 அங்கணெடுமதிள்புடைசூழயோத்தியென்னும்

அணிநகரத்துலகனைத்தும்விளக்கும்சோதி *

வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக்காய்த்தோன்றி

விண்முழுதுமுயக்கொண்டவீரன் தன்னை *

செங்கணெடுங்கருமுகிலையிராமன் தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை

என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2)

Text size