PMT 1.3

அரங்கனடியார்களோடு நெருங்கி வாழ்வேனோ!

649 எம்மாண்பின்அயன்நான்குநாவினாலும்
எடுத்தேத்திஈரிரண்டுமுகமுங்கொண்டு *
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடும்
தொழுதேத்தி இனிதிறைஞ்சநின்ற * செம்பொன்
அம்மான்றன்மலர்க்கமலக்கொப்பூழ்தோன்ற
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
அம்மான்றனடியிணைக்கீழலர்களிட்டங்
கடியவரோடென்றுகொலோஅணுகும்நாளே?
649 ĕm māṇpiṉ ayaṉ nāṉku nāviṉālum *
ĕṭuttu etti īriraṇṭu mukamum kŏṇṭu *
ĕmmāṭum ĕḻiṟkaṇkal̤ ĕṭṭiṉoṭum *
tŏḻutu etti iṉitu iṟaiñca niṉṟa ** cĕmpŏṉ
ammāṉtaṉ malark kamalak kŏppūḻ toṉṟa *
aṇi araṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
ammāṉtaṉ aṭiyiṇaik kīḻ alarkal̤ iṭṭu * aṅku
aṭiyavaroṭu ĕṉṟukŏlo aṇukum nāl̤e (3)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

649. Lord Brahmā(Nānmuhan) praises Him with four faces eight beautiful eyes and with his four tongues. Our dear lord shining like pure gold keeps Nānmuhan on a lovely lotus on his navel and He sleeps on the beautiful snake bed in Srirangam. When will be the day, when I can offer flowers at His feet, along with the devotees? When will I see Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்மாண்பின் சகல பெருமைகளும் உடைய; அயன் பிரமன்; நாவினாலும் நாவினாலும்; எடுத்து ஏத்தி ஆர்வத்துடன் துதித்து; ஈரிரண்டு நான்கு; முகமும் கொண்டு முகங்களால்; எம்மாடும் எல்லாப் பக்கங்களிலும்; எழில் அழகிய; எட்டினோடும் எட்டு கண்களினாலே; தொழுது தொழுது; ஏத்தி ஸ்தோத்திரம் பண்ணி; இனிது இனிமையாக; இறைஞ்ச நின்ற வணங்கி நின்ற; செம்பொன் சிவந்த பொன் போன்ற; அம்மான் தன் ஸ்வாமியான தன்னுடைய; மலர்க்கமல தாமரைப் பூவையுடைய; கொப்பூழ் திருநாபி; தோன்ற அணி தோன்ற அழகிய; அரங்கத்து அரங்கத்து; அரவணையில் அனந்தாழ்வான் மீது; பள்ளி கொள்ளும் உறங்கும்; அம்மான் தன் பெருமானின்; அடியிணைக் கீழ் திருவடிகளின் கீழே; அலர்கள் இட்டு மலர்களை சமர்ப்பித்து; அங்கு அடியவரோடு அங்கு அடியார்களுடன்; அணுகும் நாளே! சேர்ந்திருக்கும் நாள்; என்று கொலோ என்றைக்கோ