PMT 1.11

நாரணன் அடிக்கீழ் நலமுற நண்ணுவர்

657 திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *
கடல்விளங்குகருமேனியம்மான்றன்னைக்
கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால் *
குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்
கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த *
நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)
657 ## tiṭar vil̤aṅku karaip pŏṉṉi naṭuvupāṭṭut * tiruvaraṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
kaṭal vil̤aṅku karumeṉi ammāṉtaṉṉaik * kaṇṇārak kaṇṭu ukakkum kātaltaṉṉāl **
kuṭai vil̤aṅku viṟal-tāṉaik kŏṟṟa ŏl̤ vāl̤ * kūṭalarkoṉ kŏṭaik kulacekaraṉ cŏl cĕyta *
naṭai vil̤aṅku tamizh-mālai pattum vallār * nalantikazh nāraṇaṉ-aṭikkīzh naṇṇuvāre (11)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

657. Kulasekhara, the king with a strong army and who carries a victorious shining sword and sits under a royal umbrella, composed ten Tamil pāsurams like garlands expressing his intense devotion to the lord of Srirangam who rests on the snake bed in the midst of Ponni river with sand hillocks on its banks. Those who learn these ten pāsurams well and recite them will stay under the feet of Nāranan, who showers goodness to all.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
திடர் விளங்கு மணற்குன்றுகள்; கரை உள்ள கரையையுடைய; பொன்னி காவிரியின்; நடுவுபாட்டு நடுவில்; திருவரங்கத்து அரங்கத்து; அரவணையில் பாம்பணைமேல்; பள்ளி கொள்ளும் கண்வளரும்; கடல் விளங்கு கடல் போல் விளங்கும்; கருமேனி கரிய திருமேனியுடைய; அம்மான் தன்னை பெரிய பெருமாளை; கண்ணார கண்கள் திருப்தியடையும் அளவு; கண்டு வணங்கி; உகக்கும் ஆனந்திக்கவேணும்; காதல் தன்னால் என்னும் ஆசையினால்; குடை வெண்கொற்றக்குடையுடன்; விளங்கு விளங்குபவரும்; விறல் வீரம் மிக்க; தானை சேனைகளையுடையவரும்; கொற்ற ஒள் வெற்றியும் ஒளியும் மிக்க; வாள் வாளையுடையவரும்; கொடை உதார குணமுடையவரும்; கூடலர் மதுரைக்கு; கோன் தலைவருமான; குலசேகரன் குலசேகரப்பெருமாள்; சொற் செய்த அருளிச் செய்த; நடை விளங்கு விளக்கமான நடையிலான; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்கள்; பத்தும் வல்லார் பத்தும் ஓதுபவர்கள்; நலந் திகழ் நலங்கள் அனைத்தும் திகழும்; நாரணன் எம்பெருமானின்; அடிக்கீழ் திருவடிகளை; நண்ணுவாரே அடைவர்

Āchārya Vyākyānam

அவதாரிகை –

திரு நாமப் பாட்டு – பூவோ பூத்யை பூ புஜாம் பூ ஸூ ராணாம் திவ்யோ குப்தைஸ் ஸ்ரயசே தேவதா நாம்- ச்ரியை ராஜ்ஞாம் சோளவம் சோத்பவா நாம் ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமாஜகாம –

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால் குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் கொடை

+ Read more