PAT 5.4.1

இதயத்துள் நிறைந்து எம்பிரான் மலர்ந்தமை நின்னருளே புரிந்திருந்தேன்

463 சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய்! * உலகு
தன்னைவாழநின்றநம்பீ! தாமோதரா! சதிரா!
என்னையும்என்னுடைமையையும் உன்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2)
463 ## cĕṉṉi oṅku * taṇ tiruveṅkaṭam uṭaiyāy! * ulaku
taṉṉai vāzha niṉṟa nampī! * tāmotarā catirā! **
ĕṉṉaiyum ĕṉ uṭaimaiyaiyum * uṉ cakkarap pŏṟi ŏṟṟikkŏṇṭu *
niṉ arul̤e purintirunteṉ * iṉi ĕṉ tirukkuṟippe? (1)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

463. O! Damodharan, You reside on the lofty Thiruvenkatam hills that towers sky-high. You have descended to protect the world. You forgive the sins of your devotees. I bear the sacred mark of the discus(chakra) on me and my possessions and I beseech Your grace. What's your divine plan for me ?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓங்கு ஆகாசத்தளவு உயர்ந்திருக்கும்; சென்னி சிகரத்தையுடைய; தண் குளிர்ந்த; திருவேங்கடம் திருவேங்கட மலையை; உடையாய்! இருப்பிடமாக உடையவனே!; உலகு தன்னை உலகத்தவர்களை; வாழ வாழ்விப்பதற்காக; நின்ற எழுந்தருளியிருக்கும்; நம்பீ! குணபூர்த்தியுடைய எம்பிரானே!; தாமோதரா! தாமோதரனே!; சதிரா! அடியார்களின் குற்றத்தைப்பாராத; என்னையும் என் எனது ஆத்துமாவுக்கும் என்; உடைமையையும் உடைமையான சரீரத்திற்கும்; உன் சக்கர சங்கு - சக்கரப்; பொறி பொறியை [சமாச்ரயணம்]; ஒற்றிக்கொண்டு இடுவித்துக்கொண்டு; நின் உன்னுடைய; அருளே கருணையையே; புரிந்திருந்தேன் விரும்பி வேண்டுகிறேன்; இனி இப்படியானபின்பு; திருக்குறிப்பே? உன் திருவுள்ளக்கருத்து; என் எதுவாக இருக்குமோ?
uṭaiyāy! You, who reside in; taṇ the cool; tiruveṅkaṭam Tiruvengada (Tirumala) mountain; cĕṉṉi where the peaks rise; oṅku as high as the sky; nampī! You, the Lord full of noble virtues,; niṉṟa has graciously incarnated!; vāḻa to uplift; ulaku taṉṉai the people of the world; tāmotarā! o Damodara; catirā! You do not look at the faults of Your devotees; ŏṟṟikkŏṇṭu I carry; pŏṟi the mark of; uṉ cakkara the conch and discus; ĕṉṉaiyum ĕṉ in my soul and; uṭaimaiyaiyum my body; purintirunteṉ I yearn for; niṉ Your; arul̤e boundless grace; iṉi after such surrender; ĕṉ what could?; tirukkuṟippe? Your divine will be