Chapter 2

Asking diseases to go away because the god will protect the āzhvār and his devotees - (நெய்க் குடத்தை)

பண்டன்று பட்டினம் காப்பே
Asking diseases to go away because the god will protect the āzhvār and his devotees - (நெய்க் குடத்தை)

This body, filled with vata, pitta, and sleshma (the three doshas), is the abode of diseases. Diseases take control of humans. Just as ants swarm over a pot of ghee kept for yajnas, making it their own, diseases take over the body.

"Diseases, here's a piece of advice for you! You can no longer harm me. This body used to be mine, but now the Lord has

+ Read more

வாத பித்த ச்லேஷ்மங்கள் நிரம்பிய இவ்வுடல் நோய்களுக்கு இருப்பிடம். நோய்கள் மனிதனை வசப்படுத்திக்கொள்கின்றன. யாகயக்ஞாதிகளுக்காக வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் மொய்த்துக்கொண்டு அக்குடத்தையே தன் வசமாக்கிக் கொள்ளவில்லையா! "நோய்களே, உங்களுக்கு ஒரு அறிவுரை! நீங்கள் இனி என்னை

+ Read more
Verses: 443 to 452
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Lord will protect us from diseases
  • PAT 5.2.1
    443 ## நெய்க் குடத்தைப் பற்றி * ஏறும் எறும்புகள் போல் நிரந்து * எங்கும்
    கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்! * காலம் பெற உய்யப் போமின் **
    மெய்க் கொண்டு வந்து புகுந்து * வேதப் பிரானார் கிடந்தார் *
    பைக் கொண்ட பாம்பு அணையோடும் * பண்டு அன்று பட்டினம் காப்பே (1)
  • PAT 5.2.2
    444 சித்திரகுத்தன் எழுத்தால் * தென்புலக் கோன் பொறி ஒற்றி *
    வைத்த இலச்சினை மாற்றித் * தூதுவர் ஓடி ஒளித்தார் **
    முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் * மூதறிவாளர் முதல்வன் *
    பத்தர்க்கு அமுதன் அடியேன் * பண்டு அன்று பட்டினம் காப்பே (2)
  • PAT 5.2.3
    445 வயிற்றிற் தொழுவைப் பிரித்து * வன்புலச் சேவை அதக்கி *
    கயிற்றும் அக்கு ஆணி கழித்துக் * காலிடைப் பாசம் கழற்றி **
    எயிற்றிடை மண் கொண்ட எந்தை * இராப்பகல் ஓதுவித்து * என்னைப்
    பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் * பண்டு அன்று பட்டினம் காப்பே (3)
  • PAT 5.2.4
    446 மங்கிய வல்வினை நோய்காள்! * உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் *
    இங்குப் புகேன்மின் புகேன்மின் * எளிது அன்று கண்டீர் புகேன்மின் **
    சிங்கப் பிரான் அவன் எம்மான் * சேரும் திருக்கோயில் கண்டீர் *
    பங்கப்படாது உய்யப் போமின் * பண்டு அன்று பட்டினம் காப்பே (4)
  • PAT 5.2.5
    447 மாணிக் குறள் உரு ஆய * மாயனை என் மனத்துள்ளே *
    பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் * பிறிது இன்றி **
    மாணிக்கப் பண்டாரம் கண்டீர் * வலி வன் குறும்பர்கள் உள்ளீர் *
    பாணிக்க வேண்டா நடமின் * பண்டு அன்று பட்டினம் காப்பே (5)
  • PAT 5.2.6
    448 உற்ற உறுபிணி நோய்காள் * உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் *
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் * பேணும் திருக்கோயில் கண்டீர் **
    அற்றம் உரைக்கின்றேன் * இன்னம் ஆழ்வினைகாள்! * உமக்கு இங்கு ஓர்
    பற்றில்லை கண்டீர் நடமின் * பண்டு அன்று பட்டினம் காப்பே (6)
  • PAT 5.2.7
    449 கொங்கைச் சிறு வரை என்னும் * பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி *
    அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு * அழுந்திக் கிடந்து உழல்வேனை **
    வங்கக் கடல் வண்ணன் அம்மான் * வல்வினை ஆயின மாற்றி *
    பங்கப்படா வண்ணம் செய்தான் * பண்டு அன்று பட்டினம் காப்பே (7)
  • PAT 5.2.8
    450 ஏதங்கள் ஆயின எல்லாம் * இறங்கல் இடுவித்து * ன்னுள்ளே
    பீதக வாடைப் பிரனார் * பிரம குருவாகி வந்து **
    போதில் கமல வன் நெஞ்சம் * புகுந்து என் சென்னித் திடரில் *
    பாத இலச்சினை வைத்தார் * பண்டு அன்று பட்டினம் காப்பே (8)
  • PAT 5.2.9
    451 உறகல் உறகல் உறகல் * ஒண்சுடர் ஆழியே! சங்கே! *
    அற எறி நாந்தக வாளே * அழகிய சார்ங்கமே தண்டே! **
    இறவு படாமல் இருந்த * எண்மர் உலோக பாலீர்காள்! *
    பறவை அரையா உறகல் * பள்ளியறை குறிக்கொண்மின் (9)
  • PAT 5.2.10
    452 ## அரவத்து அமளியினோடும் * அழகிய பாற்கடலோடும் *
    அரவிந்தப் பாவையும் தானும் * அகம்படி வந்து புகுந்து **
    பரவைத் திரை பல மோதப் * பள்ளி கொள்கின்ற பிரானை *
    பரவுகின்றான் விட்டுசித்தன் * பட்டினம் காவல் பொருட்டே (10)