The Glory of Tiruvaraṅgam, the Great Temple: Araṅgam is the City of Him Who Restored Sāndīpani's Son
திருவரங்கம் பெரிய கொயிலின் மகிமை சாந்தீபினியின் மகனைக் கொடுத்தவனூர் அரங்கம்
402 மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை *
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் *
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் *
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2)