Tirumāliruñcōlai, the Mountain Where the Immaculate One Resides
விமலன் வாழும்மலை திருமாலிருஞ்சோலை மலை
357 கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து *
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை *
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று *
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே.