Tirumāliruñcōlai, the Mountain Ruled by the Lord Who Reclines on Ananta
அனந்தசயனன் ஆளும்மலை திருமாலிருஞ்சோலை
358 ## ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக *
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை *
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் *
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2)