PAT 3.8.1

The Mother Laments in Many Ways for Her Daughter Who Followed the Wondrous One: Did She Follow Him Who Slew the Wrestlers?

மாயவன் பின்சென்ற மகளை நினைத்துத் தாய் பலபடியாகக் கூறி ஏங்குதல் மல்லரை அட்டவன் பின் சென்றாளோ?

297 நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர *

அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ *

இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் *

மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2)

Text size