PAT 3.6.9

The State of the Deer upon Hearing the Flute's Music

குழலிசை கேட்ட மான்களின் நிலை

283 திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்

செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே *

சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்

ஊதுகின்றகுழலோசைவழியே *

மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து

மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர *

இரண்டுபாடும்துலுங்காப்புடைபெயரா

எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.

Text size