PAT 3.6.11

They Shall Join the Assembly of Saintly Devotees

சாதுக்களின் கோஷ்டியில் சேர்வர்

285 குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்

கோவிந்தனுடையகோமளவாயில் *

குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக்

கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை *

குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்

விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார் *

குழலைவென்றகுளிர்வாயினராகிச்

சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2)

Text size