PAT 3.5.2

The Mountain Lifted by Madhusūdana

மதுசூதன் எடுத்த மலை

265 வழுவொன்றுமில்லாச்செய்கை வானவர்கோன்

வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்ட *

மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப

மதுசூதன்எடுத்துமறித்தமலை *

இழவுதரியாததோரீற்றுப்பிடி

இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும் *

குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

Text size