Kaṇṇaṉ Protects the Cowherds and Cows by Holding Mt. Govardhana as an Umbrella against the Rain: The Mountain Borne by the Ocean-hued Lord
கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகக்கொண்டு மழை தடுத்து ஆயர்களையும் ஆனிரைகளையும் காத்தல் கடல் வண்ணன் பொறுத்த மலை
264 அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை *
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு * குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2)