PAT 3.3.3

கோடல் பூச்சூடிவரும் தாமோதரன்

246 காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி * கார்க்கோடல்பூச்
சூடிவருகின்றதாமோதரா! கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு *
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா! நீராட்டமைத்து வைத்தேன் *
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான்.
246
kādukaLoodupOy * kanRukaL mEyththu maRiyOdi * kārkkOdalpooch-
choodi varuhinRa dhāmOdharā! * kaRRu thooLikāN unnudambu *
pEdai mayiR sāyal pinnai maNāLā! * neerāttamaiththu vaiththEn *
ādi amudhu sey appanum uNdilan * unnOdu udanE uNbān. * 3.

Ragam

சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Mother

Simple Translation

246. O, Damodara! You go into the forest, graze the calves, run behind them and return, wearing kodal flowers that bloom in the rainy season. See! how your body is covered with dirt. O! Beloved of Nappinnai, lovely as a peacock. I have kept water ready for bath. Take bath and come to eat. Your father hasn't eaten yet. He will eat with you.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காடுகள் ஊடு போய் காட்டிற்குள்ளே போய்; கன்றுகள் மேய்த்து கன்று மாடுகள் மேய்த்து; மறியோடி அவை வழி தவறி போகாதிருக்க நீ ஓடி மறித்து; கார்க்கோடல்பூ கார்க்கோடல் பூக்களை; சூடி வருகின்ற சூடி வருகின்ற; தாமோதரா தாமோதரனே!; கற்றுத் தூளி கன்றுகளின் தூசு; காண் உன் உடம்பு உன் உடம்பில் படிந்துள்ளது பார்; பேடை மயிற் சாயல் பெண் மயில் போன்ற சாயலையுடைய; பின்னை மணாளா! நப்பின்னை பிராட்டியின் மணாளா!; நீராட்டு அமைத்து நீ நீராட எல்லாம் தயாராக; வைத்தேன் வைத்துள்ளேன்; ஆடி அமுதுசெய் நீராடிய பின் சாப்பிட வா; அப்பனும் உன் தந்தையும்; உண்டிலன் சாப்பிடவில்லை; உன்னோடு உடனே உன்னோடு சேர்ந்து; உண்பான் உண்ணலாமென்று!