Sītā Bound Rāma with a Jasmine Garland
சீதை மல்லிகை மாலையால் இராமனைக் கட்டியது
319 அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம் *
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே! *
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் *
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்.