The Sign Related by Hanumān to Sītā: He Shattered Paraśurāma's Penances with His Bow
சீதைக்கு அனுமன் கூறிய அடையாளம் வில்லால் பரசுராமனின் தவவலிமையைச் சிதைத்தது
318 நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன் விண்ணப்பம் *
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்த
தறிந்து * அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க *
செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2)