PAT 3.1.7

The Luminous Effulgence Worshipped by the Cowherd Maidens

ஆயர் கன்னியர் தொழும் சோதி

229 மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு

வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி *

சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச்

சுற்றும்தொழநின்றசோதி! *

பொருட்டாயமிலேன்எம்பெருமான்!

உன்னைப்பெற்றகுற்றமல்லால் * மற்றிங்கு

அரட்டா! உன்னைஅறிந்துகொண்டேன்

உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.

Text size