PAT 3.1.5

The Child Who Accomplishes Anything by Crying Convincingly

விம்மியழுது எதையும் சாதிக்கும் பிள்ளை

227 முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயி

னோடு தயிரும்விழுங்கி *

கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த

கலத்தொடுசாய்த்துப்பருகி *

மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல

நீவிம்மிவிம்மியழுகின்ற *

அப்பா! உன்னைஅறிந்துகொண்டேன்

உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.

Text size