Applying the Protective Ward (Calling Kaṇṇaṉ for the evening protection against the evil eye): The Beautiful Lord of Tiruveḷḷaṟai
காப்பிடல் (திருஷ்டி தோஷம் வராதபடி திருவந்திக்காப்பிடக் கண்ணனை அழைத்தல்) திருவெள்ளறை அழகன்
192 இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் *
மந்திரமாமலர்கொண்டு மறைந்துவராய்வந்துநின்றார் *
சந்திரன்மாளிகைசேரும் சதுரர்கள்வெள்ளறைநின்றாய் *
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே! காப்பிடவாராய். (2)