PAT 2.4.1

The Holy Bath (Calling Kaṇṇaṉ to bathe): The Seat for the Holy Bath

நீராட்டம் (கண்ணனை நீராட அழைத்தல்) ஸ்நானாஸனம்

152 வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு *

திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன் *

எண்ணெய்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன் *

நண்ணலரியபிரானே! நாரணா! நீராடவாராய் (2)

Text size