தனியன் / Taniyan

நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்

சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல்

மாலத்தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய

சோலைக்கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே

kolac curi caṅkai māyaṉ cĕvvāyiṉ kuṇam viṉavum

cīlattaṉal̤ * tĕṉ tirumalli nāṭi * cĕḻuṅkuḻal mel

mālattŏṭai tĕṉṉaraṅkarukkīyum matippuṭaiya

colaikkil̤i * aval̤ tūya naṟpātam tuṇai namakke

திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ

Word by word meaning

சீலத்தனள் விருப்பம் உடையவளும்; தென் திருமல்லி நாடி தென் திருமல்லி நாட்டுத் தலைவியும்; செழுங்குழல் செழுமை மிக்க தன் கூந்தலில்; மேல் பூச்சூட்டி இருப்பவளும்; தென்னரங்கருக்கு கண்ணனுக்கு; மாலத் தொடை மாலையை; ஈயும் ஸமர்ப்பிக்க வேண்டும் என்ற; மதிப்புடைய மதிப்பையும் மேன்மையையும் உடைய; சோலைக் கிளி சோலைக் கிளி போன்ற; அவள் தூய தூய இனிய பேச்சை உடையவளுமான; நல் பாதம் ஆண்டாளின் புனிதமான திருவடிகளே; துணை நமக்கே நமக்கு புகலிடம்; கோலச்சுரி அழகிய வரிகளையுடைய; சங்கை பாஞ்சஜன்ய சங்கை நோக்கி; மாயன் அதனிடத்திலிருந்து மாயக்கண்ணனின்; செவ்வாயின் சிவந்த அதரத்தின்; குணம் வினவும் குணவிசேஷங்களைக் அறியும்

நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

அல்லி நாள் தாமரை மேலாரணங்கினின் துணைவி *

மல்லி நாடாண்ட மட மயில் - மெல்லியலாள் *

ஆயர் குல வேந்தனாகத்தாள் * தென்புதுவை

வேயர் பயந்த விளக்கு

allināḻ tāmaraimēl āraṇaṅgin in tuṇaivi⋆

mallināḍāṇḍa maḍamayil melliyalāḻ ⋆

āyar kulavēndan āgattāḻ⋆

ten puduvai vēyar payanda viḻakku

திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ
NAT-2

Word by word meaning

அல்லி நாள் அன்று அலர்ந்த; தாமரை மேல் தாமரைப் பூவின் மேல்; ஆரணங்கின் சிறந்த ஸ்வபாவமுடைய; இன் துணைவி திருமகளுக்கு, இனிய தோழியாகவும்; மல்லி நாடாண்ட மல்லி நாட்டை ஆ ண்ட; மடமயில் அழகிய மயில் போன்றவளாயும்; மெல்லியலாள் மென்மையான ஆண்டாள்; ஆயர்குல ஆயர்குல; வேந்தன் தலைவனான கண்ணனின்; ஆகத்தாள் திருமேனியில் விருப்பம் கொண்டவளாய்; தென்புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில்; வேயர் பயந்த பெரியாழ்வாரின் மகளாக வேயர்குல; விளக்கு விளக்காக இருந்தாள்