Take Me to Govardhana Hill
கோவர்த்தனத்திற்கு என்னை உய்த்திடுமின்
624 கற்றினம்மேய்க்கிலும்மேய்க்கப்பெற்றான்
காடுவாழ்சாதியுமாகப்பெற்றான் *
பற்றியுரலிடையாப்புமுண்டான்
பாவிகாள்! உங்களுக்கேச்சுக்கொலோ? *
கற்றனபேசிவசையுணாதே
காலிகளுய்யமழைதடுத்து *
கொற்றக்குடையாகவேந்திநின்ற
கோவர்த்தனத்தென்னையுய்த்திடுமின்.