Adorn Me with the Sacred Tulasī Garland
திருத்துழாய் மாலையை எனக்குச் சூட்டுங்கள்
623 வண்ணம்திரிவும்மனங்குழைவும்
மானமிலாமையும்வாய்வெளுப்பும் *
உண்ணலுறாமையுமுள்மெலிவும்
ஓதநீர்வண்ணனென்பானொருவன் *
தண்ணந்துழாயென்னும்மாலைகொண்டு
சூட்டத்தணியும் * பிலம்பன்றன்னைப்
பண்ணழியப்பலதேவன்வென்ற
பாண்டிவடத்தென்னையுய்த்திடுமின்.