Send Me to the Wondrous Lord's Āyarpāḍi
மாயனின் ஆய்ப்பாடிக்கே என்னை அனுப்புங்கள்
618 நாணியினியோர்கருமமில்லை
நாலயலாரும்அறிந்தொழிந்தார் *
பாணியாதென்னைமருந்துசெய்து
பண்டுபண்டாக்கவுறுதிராகில் *
மாணியுருவாயுலகளந்த
மாயனைக்காணில்தலைமறியும் *
ஆணையால்நீரென்னைக்காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக்கேயென்னையுய்த்திடுமின்.