Take Me to the Outskirts of Mathurā
மதுரைப்புறத்து என்னை அழைத்துச் செல்லுங்கள்
617 மற்றிருந்தீர்கட்கறியலாகா
மாதவனென்பதோரன்புதன்னை *
உற்றிருந்தேனுக்குரைப்பதெல்லாம்
ஊமையரோடுசெவிடர்வார்த்தை *
பெற்றிருந்தாளையொழியவேபோய்ப்
பேர்த்தொருதாயில்வளர்ந்தநம்பி *
மற்பொருந்தாமற்களமடைந்த
மதுரைப்புறத்தென்னையுய்த்திடுமின். (2)