O Kāntaḷ Flowers! Where is the Ocean-hued Lord?
காந்தள் மலர்களே! கடல் வண்ணன் எங்குற்றான்?
597 கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல்வண்ணனென்மேல் * உம்மைப்
போர்க்கோலம்செய்து போரவிடுத்தவனெங்குற்றான் *
ஆர்க்கோஇனிநாம் பூசலிடுவது? * அணிதுழாய்த்
தார்க்கோடும்நெஞ்சந்தன்னைப் படைக்கவல்லேனந்தோ. (2)