தனியன் / Taniyan

கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் / Kaṇṇiṇuṇchiṛuthāmbu taṉiyaṉkal̤

அவிதித விஷயாந்தரஸ் ஸாடாரே

உப நிஷதாம் உபகா நமாத்ர போக:

அபிச குண வஸாத் ததேக ஸேஷீ

மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து

avidita viṣayāntaraś śaṭhārēḥ

upa niṣadām upagā namātra bhōgaḥ

api ca guṇavaśā tadēkaśēṣī

madhurakavir hṛdayē mamāvi rastu

ஸ்ரீமந் நாதமுனிகள் / śrīman nātamuṉikal̤

Word by word meaning

शठारे: நம்மாழ்வாரைத் தவிர; अविदित विषयान्तर: வேறு விஷங்களை அறியாதவரான; उपनिषदाम् திரமிடோபநிஷத்தான திருவாய்மொழியை; उपगान मात्र பாடுவது ஒன்றையே; भोग: பேரின்பமாகக் கொண்டவரும்; अपि च மேலும்; गुणवशात् குணமடியாகவும்; त्तदेकशेषी நம்மாழ்வார் ஒருவருக்கே ஆட்பட்டவராகவும்; मधुरकवि: மதுரகவி ஆழ்வார்; मम हृदये என் மனதில்; आविरस्तु வீற்றிருக்கட்டும்

கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் / Kaṇṇiṇuṇchiṛuthāmbu taṉiyaṉkal̤

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த *

மாறன் சடகோபன் வண் குருகூர் - ஏறு *

எங்கள் வாழ்வா மென்றேத்தும் மதுரகவியார் *

எம்மை ஆள்வார் அவரே அரண்

vēṟonṟum nānaṟiyēn vēdam tamizśeyda⋆

māṟan śaḍagōban vaṇ kurugūr ⋆ - ēreṅgaḻ

vāzvām enṟēttum⋆ madurakaviyār emmai

āḻvār⋆ avarē araṇ

ஸ்ரீமந் நாதமுனிகள் / śrīman nātamuṉikal̤
Verondrum

Word by word meaning

வேறொன்றும் நம்மாழ்வார் தவிர வேறொன்றும்; நானறியேன் நான் அறியேன்; வேதம் வேதார்த்தங்களை; தமிழ் செய்த தமிழில் அருளிச்செய்த; மாறன் சடகோபன் மாறன் என்னும் நம்மாழ்வாரும்; வண்குருகூர் அழகிய திருகுருகூரில் அவதரித்தவரும்; ஏறு, எங்கள் எங்கள் தலைவரும்; வாழ்வாம் என்றேத்தும் எமக்கு உஜ்ஜீவனராவர் என்று; மதுரகவியார் மதுரகவி ஆழ்வார்; எம்மை ஆள்வார் நம்மை ஆள்பவர்; அவரே அரண் அவரே நமக்குப் புகலிடம்