Thalaichankādu
Your browser does not support the audio element.
audio
1736 கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும் *
தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள் *
விண்ணோர்நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை *
கண்ணாரக்கண்டுகொண்டு களிக்கின்றதுஇங்குஎன்றுகொலோ. (2)
2782 மன்னும்மறைநான்குமானானை * புல்லாணித்
தென்னன்தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *
நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை * - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென்னறையூர்
மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *