Navathiruppathi
Your browser does not support the audio element.
audio
3687 புளிங்குடிக்கிடந்துவரகுணமங்கையிருந்து
வைகுந்தத்துள்நின்று *
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே
என்னையாள்வாய்! எனக்கருளி *
நளிந்தசீருலகமூன்றுடன்வியப்ப
நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப *
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்
கனிவாய்சிவப்ப நீகாணவாராயே.
3691 எங்கள்கண்முகப்பேயுலகர்களெல்லாம்
இணையடிதொழுதெழுந்திறைஞ்சி *
தங்களன்பாரத்தமதுசொல்வலத்தால்
தலைத்தலைச்சிறந்தபூசிப்ப *
திங்கள்சேர்மாடத்திருப்புளிங்குடியாய்!
திருவைகுந்தத்துள்ளாய்! தேவா! *
இங்கண்மாஞாலத்திதனுளுமொருநாள்
இருந்திடாய் வீற்றிடங்கொண்டே.