449. விடாய் பிறந்தபோது கரஸ்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமூத ஜலத்தையும் ஸாகர ஸலிலத்தையும் ஸரித் ஸலிலத்தையும் வாபீகூப பயஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன் [உதகம் \= நீர், ஜீமுதம் \= மேகம், ஸாகரஸலிலம் \= திருப்பாற்கடல் நீர், ஸரித்ஸலிலம் \= ஆற்று நீர், வாபீ \= குளம், பயஸ்ஸு \= நீர், கூபம் \= கிணறு]