I Realized that Kaṇṇaṉ Has Mingled Within Me.
கண்ணன் என்னுள் கலந்துவிட்டமை உணர்ந்தேன்
3643 யானும்தானாயொழிந்தானை யாதும்யவர்க்கும்முன்னோனை *
தானும்சிவனும்பிரமனுமாகிப் பணைத்ததனிமுதலை *
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்தித்து * என்
ஊனிலுயிரிலுணர்வினில் நின்றவொன்றை யுணர்ந்தேனே.