Chapter 9

Āzhvār feeling blessed and indebted for the ability to sing about the Lord - (என்றைக்கும் என்னை)

இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்
Āzhvār asks for one thing, but emperumAn distracts him and makes him forget his original thought process. One day, Āzhvār caught Bhagavān in a stronghold and said, “emperumAnE! What deficiency do you see in me?! Why are you torturing me like this?! Is it appropriate for your greatness to still keep me in this world?” Bhagavān responds, “ Āzhvār! Don’t + Read more
ஆழ்வார் ஒன்று கேட்டால் எம்பெருமான் ஒன்று சொல்லி அவரது எண்ணத்தை மறக்கச் செய்து வந்தான். ஒரு நாள் ஆழ்வார் பகவானை வலியப் பிடித்துக்கொண்டார். “எம்பெருமானே! என்னிடம் என்ன குறை கண்டாய்! என்னை ஏன் இப்படித் துன்புறுத்துகிறாய்! இந்தப் பூமியிலேயே என்னை வைத்திருப்பது உன் பெருமைக்குத் தகுமா?” + Read more
Verses: 3541 to 3551
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will obtain the joy of reaching the god
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.9.1

3541 என்றைக்குமென்னை உய்யக்கொண்டுபோகிய *
அன்றைக்கன்றென்னைத் தன்னாக்கிஎன்னால்தன்னை *
இன்தமிழ்பாடியவீசனை ஆதியாய்
நின்றஎன்சோதியை * என்சொல்லிநிற்பனோ? (2)
3541 ## என்றைக்கும் என்னை * உய்யக்கொண்டு போகிய *
அன்றைக்கு அன்று என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை **
இன் தமிழ் பாடிய ஈசனை * ஆதியாய்
நின்ற என் சோதியை * என் சொல்லி நிற்பனோ? (1)
3541 ## ĕṉṟaikkum ĕṉṉai * uyyakkŏṇṭu pokiya *
aṉṟaikku aṉṟu ĕṉṉait * taṉṉākki ĕṉṉāl taṉṉai **
iṉ tamizh pāṭiya īcaṉai * ātiyāy
niṉṟa ĕṉ cotiyai * ĕṉ cŏlli niṟpaṉo? (1)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Despite my long straying from the Lord, He welcomed me into His steadfast fold and bestowed upon me abundant blessings of knowledge and strength. He elevated me to His level and, through His exquisite charm, inspired me to compose this sweet hymn. How can I adequately express His abundant grace?

Explanatory Notes

The Saint thaws down in gratitude over the Lord’s enormous grace in getting hymnals sung through him, duly equipping him for this assignment. Indeed, the outpourings of Saints are all inspired by God and therefore it is that the Āzhvār does not claim authorship for the hymnal, sung by the Lord through him as His mouth-piece. This hymnal is claimed to be sweet because the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை நெடு நாளாக ஞான சக்தியற்ற என்னை; என்றைக்கும் அங்கீகரித்து; போகிய அன்று நிகழ்காலத்தில்; அன்றைக்கு நாள்தோறும்; உய்யக்கொண்டு ஆட்கொண்டு உய்வு பெறச் செய்து; என்னை என்னை தன்னை விட்டு; தன்னாக்கி செல்லாமையைப் பிறப்பித்து; என்னால் என் மூலம் தன்னையே; தன்னை வேதங்களுக்கும் எட்டாத பெருமை பொலிந்த; இன் தமிழ் தன் விஷயமாக இனிய தமிழ்ப் பாசுரங்களால்; பாடிய பாடுவித்துக் கொண்ட; ஈசனை ஈசனை; ஆதியாய் நின்ற பாடுவதற்குக் காரணமாக நின்ற; என் சோதியை என் சோதியை; என் சொல்லி நிற்பன் ஓ? எத்தைச் சொல்லித் தரிப்பேன்?
anṛaikkanṛu forever; ennai uyyakkoṇdu specially blessing me; ennai me; thannākki causing the craving in me to exist only for him; ennāl having me who doesn-t have knowledge etc to sing praises, as the reason; thannai him (who is having such glories that even vĕdham etc give up praising him); in pāsurams themselves being very sweet; thamizh thamizh pāsurams (which are pursuable by all); pādiya sang; īsanai natural lord; ādhiyāy being the root cause due to remaining inside me and singing; ninṛa becoming stable due to that; en sŏdhiyai one who revealed his having a radiant form; en what; solli say; niṛpan hold myself together; en my; in attached to worldly pleasures

TVM 7.9.2

3542 என்சொல்லிநிற்பன்? என்னின்னுயிரின்றொன்றாய் *
என்சொல்லால்யான்சொன்ன இன்கவியென்பித்து *
தன்சொல்லால்தான்தன்னைக் கீர்த்தித்தமாயன் * என்
முன்சொல்லும் மூவுருவாம்முதல்வனே.
3542 என் சொல்லி நிற்பன் * என் இன் உயிர் இன்று ஒன்றாய் *
என் சொல்லால் யான் சொன்ன * இன் கவி என்பித்து **
தன் சொல்லால் தான் தன்னைக் * கீர்த்தித்த மாயன் * என்
முன் சொல்லும் * மூவுருவாம் முதல்வனே? (2)
3542 ĕṉ cŏlli niṟpaṉ * ĕṉ iṉ uyir iṉṟu ŏṉṟāy *
ĕṉ cŏllāl yāṉ cŏṉṉa * iṉ kavi ĕṉpittu **
taṉ cŏllāl tāṉ taṉṉaik * kīrttitta māyaṉ * ĕṉ
muṉ cŏllum * mūvuruvām mutalvaṉe? (2)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

How can I adequately express my gratitude to the Supreme Being, who operates as the Trinity and inspires me from within to sing His praises? He guides me to articulate His glory through words, enabling me to compose this hymn and present myself as its author.

Explanatory Notes

The Āzhvār is indeed at a loss to find words to express the boundless grace of the Lord, who weaned him away from his waywardness and chose him as His mouthpiece to repeat the words dictated by Him and then glorified him as the great author of this grand hymnal. This is just like His discharging the cosmic functions through Brahmā, Rudra, Indra and the whole hierarchy, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் இன் உயிர் என்னுடைய இனிய உயிரானது; இன்று ஒன்றாய் இன்று ஒரு பொருளாகும்படி; என் சொல்லால் என் சொல்லால்; யான் சொன்ன யான் சொன்ன; இன் கவி என் இனிய கவி என்பதாக; பித்து பிரபந்தத்தை பிரசித்தமாக்கி; தன் சொல்லால் தன்னுடைய உக்திகளால்; தான் தன்னை தானே தன்னை; கீர்த்தித்த புகழ்ந்து பாடிக் கொண்டவனாய்; என் முன் எனக்குள்ளே இருந்து; சொல்லும் முன்னுருச் சொல்லும்; மாயன் ஆச்சர்யத்தை உடையவனும்; மூ உருவாம் மும்மூர்திகளின் உருவமாய் இருக்கும்; முதல்வனே காரணபூதனைக் குறித்து; என் சொல்லி நிற்பன் எத்தைச் சொல்லித் தரிப்பேன்
uyir āthmā (soul); inṛu today; onṛāy as his belonging; #NAME? my; sollāl words; yān ī, as the author; sonna spoke; in kavi sweet poem-; enbiththu making it popular in the world; than his; sollāl words; thān being the author; thannai having him as the object of the poem; kīrththiththa one who sang praises; en being inside me; mun sollum reciting pāsurams before me [so that ī can repeat them]; māyan amaśing lord; mū uruvāy having three forms; mudhalvan the causal lord who is present as one; en solli niṛpan what will ī tell to hold myself together?; mudhalvan he, the causal lord; ivan ām to be sung by him

TVM 7.9.3

3543 ஆமுதல்வனிவனென்று தற்றேற்றி * என்
நாமுதல்வந்துபுகுந்து நல்லின்கவி *
தூமுதற்பத்தர்க்குத் தான்தன்னைச்சொன்ன * என்
வாய்முதலப்பனை என்றுமறப்பனோ?
3543 ஆ முதல்வன் இவன் என்று * தன் தேற்றி * என்
நா முதல் வந்து புகுந்து * நல் இன் கவி **
தூ முதல் பத்தர்க்குத் * தான் தன்னைச் சொன்ன * என்
வாய் முதல் அப்பனை * என்று மறப்பனோ? (3)
3543 ā mutalvaṉ ivaṉ ĕṉṟu * taṉ teṟṟi * ĕṉ
nā mutal vantu pukuntu * nal iṉ kavi **
tū mutal pattarkkut * tāṉ taṉṉaic cŏṉṉa * ĕṉ
vāy mutal appaṉai * ĕṉṟu maṟappaṉo? (3)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

How could I ever forget my Lord, who wished for me to become the leader of the devoted clan, bestowed clarity upon me, and filled my tongue with sweet songs to serve the pious, the great Benefactor who granted me the gift of speech?

Explanatory Notes

(i) The Āzhvār gratefully acknowledges the Lord’s assignment to him of the role of redeeming the worldlings, sunk in sorrow and despair, by instilling in him, as a preparatory measure, clarity of knowledge and understanding that He is the Supreme Lord of the Universe, the Sole Refuge of all His subjects. Bent upon redeeming the subjects in the ‘Līlā Vibhūti’ (Sportive + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவன் குருகூர்ச்சடகோபனாகிய இவன்; முதல்வன் ஆம் என்று பிரபந்ந ஜநகூடஸ்தானாகக் கடவன் என்று; தன் தன் விஷயமான; தேற்றி தெளிவை எனக்குப் பிறப்பித்து; என் நா முதல் என்னுடைய நாவிலே தானே; வந்து புகுந்து வந்து புகுந்து; நல் இன் கவி நல்ல இனிய சொல் தொடைகளை நான் பாடுவதாகச் சொன்னான்; தூ முதல் தூய்மையான; பத்தர்க்கு பக்தர்களுக்கு; தான் தன்னை சொன்ன தானே தன்னை கவி பாடிக்கொண்டவனாய்; என்வாய் முதல் என் வாக்குக்குக் காரணமான; அப்பனை எம்பெருமானை; என்று மறப்பனோ ஒரு நாளும் மறக்க மாட்டேன்
enṛu saying; than him; thĕṝi determined in his mind (upon me); mudhal first; en nā in my tongue; vandhu pugundhu entered; nal having no shortcoming in the meanings and the words; in being very relishable; kavi poem; thū having sathva ṣudhdhi (purity of goodness); mudhal etc; paththarkku to be enjoyed by those who have bhakthi; thān he himself; thannai about himself; sonna spoke; en vāy for my speech; mudhal cause; appanai benefactor; enṛu maṛappan will ī forget?; en āgiyĕ in me; thappudhal inṛi without missing

TVM 7.9.4

3544 அப்பனையென்றுமறப்பன்? என்னாகியே *
தப்புதலின்றித் தனைக்கவிதான்சொல்லி *
ஒப்பிலாத்தீவினையேனை உய்யக்கொண்டு *
செப்பமேசெய்து திரிகின்றசீர்கண்டே.
3544 அப்பனை என்று மறப்பன் * என் ஆகியே *
தப்புதல் இன்றித் * தனைக் கவி தான் சொல்லி **
ஒப்பிலாத் தீவினையேனை * உய்யக்கொண்டு *
செப்பமே செய்து * திரிகின்ற சீர்கண்டே? (4)
3544 appaṉai ĕṉṟu maṟappaṉ * ĕṉ ākiye *
tapputal iṉṟit * taṉaik kavi tāṉ cŏlli **
ŏppilāt tīviṉaiyeṉai * uyyakkŏṇṭu *
cĕppame cĕytu * tirikiṉṟa cīrkaṇṭe? (4)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

How can I ever forget my great Benefactor, witnessing His immense love for me, a great sinner, constantly redeeming and nurturing me, and allowing His great glory to be sung through me, ensuring no flaw enters in?

Explanatory Notes

(i) It is not a matter for any wonder if the Lord sang poems of His great glory Himself. But the real wonder is, He chose Caṭakōpaṉ, ill-equipped for hymning, to sing the songs and ensured, at the same time, their perfe-ectin [perfection?], eliminating the risk of contamination through his association. “It is because of His omniscience and omnipotence that He could achieve + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் ஆகியே என்னைக் கொண்டே; தப்புதல் இன்றி தவறுதல் இல்லாதபடி; தனைக் கவி தான் தன்னைத் தானே; சொல்லி கவி பாடி; ஒப்பிலா ஒப்பற்று இருப்பதாய்; தீவினையேனை கொடிய பாபியான என்னை; உய்யக்கொண்டு அங்கீகரித்து உய்யக்கொண்ட; செப்பமே செய்து என் ரக்ஷணத்தையே நினைத்த; திரிகின்ற சீர் கண்டே அவன் சீல குணத்தைக் கண்டும்; அப்பனை என்று அப்பெருமானை என்றைக்காவது; மறப்பன்? மறக்க முடியுமோ?
thanai him; thān himself; kavi solli singing praises; oppu ilā matchless; thī cruel; vinaiyĕnai me, the sinner; uyya to be uplifted; koṇdu accepted; seppamĕ honestly; seydhu thiriginṛa acting and interacting; sīr quality (simplicity); kaṇdu on seeing; appanai one who is benefactor in this manner; enṛu even if he becomes harmful; maṛappan will ī forget?; sīr his qualities which were revealed; kaṇdu seeing

TVM 7.9.5

3545 சீர்கண்டுகொண்டு திருந்துநல்லின்கவி *
நேர்படயான்சொல்லும் நீர்மையிலாமையில் *
ஏர்விலாஎன்னைத் தன்னாக்கிஎன்னால்தன்னை *
பார்பரவின்கவி பாடும்பரமரே.
3545 சீர் கண்டுகொண்டு * திருந்து நல் இன்கவி *
நேர்பட யான் சொல்லும் * நீர்மை இலாமையில் **
ஏர்வு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
பார் பரவு இன் கவி * பாடும் பரமரே (5)
3545 cīr kaṇṭukŏṇṭu * tiruntu nal iṉkavi *
nerpaṭa yāṉ cŏllum * nīrmai ilāmaiyil **
ervu ilā ĕṉṉait * taṉṉākki ĕṉṉāl taṉṉai *
pār paravu iṉ kavi * pāṭum paramare (5)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Supreme Lord blessed me, despite my limited ability in hymning, by allowing me to express His greatness through sweet and pure songs, fully immersed in Him. He made me an effective medium, enabling me to sing and propagate His glory far and wide, just like Him.

Explanatory Notes

The Āzhvār says that he was not qualified to compose poems, as he did not have any poetic talent worth the name, and even assuming that he could compose poemṣ, he was hardly eligible to sing the Lord’s glory, as he didn’t know a wee wit of His greatness and grandeur. But what has the Lord done? He has instilled in the Āzhvār the requisite knowledge and qualities and elevated + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் எம்பெருமான் கல்யாண குணங்களை; கண்டு கொண்டு காட்டி; திருந்து திருத்தமான; நல் இன் கவி நல்ல இனிய மதுரமான பாசுரங்களை; நேர்பட யான் நேர்பட நான்; சொல்லும் நீர்மை பாடும் ஞானம் திறமை எனக்கு; இலாமையில் இல்லாமையால் தாழ்ந்தவனான; ஏர்வு இலா என்னை தகுதி இல்லாத என்னை; தன்னாக்கி தன் அருகில் பக்தி கொள்ளச் செய்து; என்னால் அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற; தன்னை அடியேனைக் கொண்டு தன் விஷயமாக; பார் பரவு பூவுலகமெல்லாம் துதிக்கத் தக்க; இன் கவி பாடும் இனிய கவி பாடும்; பரமரே பரமன் அவனே ஆவான்
koṇdu meditating upon them; thirundhu (to be revealed) being reformed; nal words and meaning being well formed; in sweet to listen; kavi poems; nĕrpada to occur; yān ī; sollum to sing; nīrmai nature of having knowledge, ability etc; ilāmaiyil due to not having; ĕrvilā inept; ennai me; than towards him; ākki making me to have such knowledge, devotion etc; ennāl by me; thannai him; pār the whole earth which is hard; paravu to praise; in sweet; kavi poem; pādum due to singing; paramar is great.; in infinitely sweet; kavi poems

TVM 7.9.6

3546 இன்கவிபாடும் பரமகவிகளால் *
தன்கவிதான் தன்னைப்பாடுவியாது * இன்று
நன்குவந்தென்னுடனாக்கி என்னால்தன்னை *
வன்கவிபாடும் என்வைகுந்தநாதனே.
3546 இன் கவி பாடும் * பரம கவிகளால் *
தன் கவி தான் தன்னைப் * பாடுவியாது இன்று **
நன்கு வந்து என்னுடன் ஆக்கி * என்னால் தன்னை *
வன் கவி பாடும் * என் வைகுந்த நாதனே (6)
3546 iṉ kavi pāṭum * parama kavikal̤āl *
taṉ kavi tāṉ taṉṉaip * pāṭuviyātu iṉṟu **
naṉku vantu ĕṉṉuṭaṉ ākki * ĕṉṉāl taṉṉai *
vaṉ kavi pāṭum * ĕṉ vaikunta nātaṉe (6)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

It's truly gracious of the celestial Lord to select me as His vessel and shower His grace upon me, allowing His glory to be sung through me, even though He could easily have enlisted the first three Āzhvārs, the most melodious poets, for this purpose!

Explanatory Notes

There have indeed been many sweet-singing poets combining poetic skill and piety, like Vyāsa, Parāśara and Vālmīki, the great Sanskrit poets and the first three Āzhvārs and ‘Tirumaḷicai Āzhvār’ who have many sweet, soul-stirring hymns in Tamil to their credit. The Lord could have got the ‘Tiruvāymoḻi’ also sung by these super-eminent poets and yet He deigned to shed His + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் வைகுந்த பரமபதத்திலிருக்கும்; நாதனே! எம்பெருமானே!; இன் கவி பாடும் இனிய கவிகளைப் பாடவல்ல; பரம சிறந்த புலமை பெற்ற; கவிகளால் கவிகளால்; தன் கவி தனக்குத் தகுதியான பாசுரங்களை; தான் தன்னை தானே தன்னை; பாடுவியாது பாடுவித்துக் கொள்ளாமல்; இன்று நன்கு வந்து இன்று உவந்து வந்து என்னை; என்னுடனாக்கி தன்னோடு ஒத்தவனாக்கி; என்னால் என்னால்; தன்னை தன்னை சொற்செறிவு பொருட்செறிவுள்ள; வன் கவி உறுதிப்பாடு உடைய வேதத்தை; பாடும் பாடிக்கொண்டான்
pādum those who sing; parama kavigal̤āl by the great poets such as parāṣara, pārāṣara (vyāsa), vālmeeki et al who have none greater, mudhalāzhvārgal̤ (et al); than matching him; kavi poem; thān him (being the instigator); thannai himself who has infinite greatness; pāduviyādhu instead of making them sing ever; inṛu today; nangu with intent; vandhu came; ennudan with me; ākki made; en for me; vaigundha nādhanĕ manifesting his greatness of being ṣrīvaikuṇtanātha (lord of ṣrīvaikuṇtam); ennāl through me; thannai him who has such greatness; van perfectly; kavi pādum will sing poems.; vaigundha nādhan ḥaving the greatness of being ṣrīvaikuṇtanātha; val very strong

TVM 7.9.7

3547 வைகுந்தநாதன் என்வல்வினைமாய்ந்தற *
செய்குந்தன் தன்னை என்னாக்கிஎன்னால்தன்னை *
வைகுந்தனாகப்புகழ வண்தீங்கவி *
செய்குந்தன்தன்னை எந்நாள்சிந்தித்தார்வனோ?
3547 வைகுந்த நாதன் * என வல்வினை மாய்ந்து அற *
செய் குந்தன் தன்னை * என் ஆக்கி என்னால் தன்னை **
வைகுந்தன் ஆகப் புகழ * வண் தீம் கவி *
செய் குந்தன் தன்னை * எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)
3547 vaikunta nātaṉ * ĕṉa valviṉai māyntu aṟa *
cĕy kuntaṉ taṉṉai * ĕṉ ākki ĕṉṉāl taṉṉai **
vaikuntaṉ ākap pukazha * vaṇ tīm kavi *
cĕy kuntaṉ taṉṉai * ĕn nāl̤ cintittu ārvaṉo? (7)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I can never be fully satisfied, no matter how much I contemplate, for my gracious Lord inspired me to sing incomparable songs praising His glory as the divine Lord, cleansing me of my sins and elevating me to His level, where I can freely commune with Him.

Explanatory Notes

The Lord of the Universe, Chief of the exalted Celestials has condescended to shed His limitless grace on a great sinner, and cleanse him throughly, making him pure like Him. And what more? The regenerated Āzhvār, of immaculate purity, is made by Him to sing His spiritual worldly glory and grandeur to His great delectation. It is indeed amazing that the Lord should feel + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வைகுந்த நாதன் பரமபதநாதனும் எம்பெருமானும்; என் வல் வினை என்னுடைய கொடிய பாபங்களை; மாய்ந்து அற தொலையும்படி போக்கிய; செய் குந்தன் தூயோனுமான எம்பெருமான்; தன்னை என்னாக்கி என்னைத் தனக்கு உரியவனாக்கி; என்னால் தன்னை என்னைக்கொண்டு தன்னை; வைகுந்தனாகப் புகழ வைகுந்த நாதனாகப் புகழும்படி; வண் உதாரமான; தீங் கவி இனிய பாசுரங்களை; செய்குந்தன் செய்யும்படியான; தன்னை உபகார ஸ்வபாவமுடையவனை; எந் நாள் சிந்தித்து எத்தனை நாள் சிந்தித்தாலும்; ஆர்வனோ மன நிறைவு உண்டாகுமோ?
en vinai my sin; māyndhaṛa to destroy; sey doing; kundhan having the nature; thannai him; ennākki making him to be understood by me; ennāl having me as a tool; thannai he who is having such greatness; vaigundhanāga not to cause any blemish for his nature; pugazha to praise; vaṇ magnanimously; thīm sweet; kavi poem; sey to do; kundhan having the nature of favouring; thannai him; sindhiththu think; ennāl̤ ārvan when will ī get satisfaction?; ĕrvu gyānam, ṣakthi etc which are required for singing poem; ilā lacking

TVM 7.9.8

3548 ஆர்வனோ? ஆழியங்கை எம்பிரான்புகழ் *
பார்விண்நீர்முற்றும் கலந்துபருகிலும் *
ஏர்விலாஎன்னைத் தன்னாக்கிஎன்னால்தன்னை *
சீர்பெறஇன்கவி சொன்னதிறத்துக்கே.
3548 ஆர்வனோ ஆழி அங்கை * எம் பிரான் புகழ் *
பார் விண் நீர் முற்றும் * கலந்து பருகிலும் **
ஏர்வு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
சீர்பெற இன் கவி * சொன்ன திறத்துக்கே? (8)
3548 ārvaṉo āzhi aṅkai * ĕm pirāṉ pukazh *
pār viṇ nīr muṟṟum * kalantu parukilum **
ervu ilā ĕṉṉait * taṉṉākki ĕṉṉāl taṉṉai *
cīrpĕṟa iṉ kavi * cŏṉṉa tiṟattukke? (8)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

If all worlds, above and below, along with those in the Milk Ocean, praised the Lord who wields the discus and raised me to His level through sweet hymns, would I reach the pinnacle of satisfaction?

Explanatory Notes

Yet another way of interpreting this song could be as follows: Even if the Āzhvār acquired the combined power of speech of the denizens of Earth, spiritual world and the Milk-ocean, and expressed his gratitude for the Lord who chose him as His instrument for singing ‘Tiruvāymoḻi’, he can never reach the end of exhaustion. This is so, because the Lord not merely made the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர்வு இலா என்னை தகுதியற்ற என்னை; தன்னாக்கி தனக்கு உரியவனாக்கி; என்னால் தன்னை என்னால் தனக்கு; சீர் பெற சிறப்புண்டாம்படி; இன் கவி இனிய பாசுரங்களை; சொன்ன திறத்துக்கே பாடுவித்த பிரகாரத்துக்கு; ஆழி அங்கை சக்கரத்தைக் கையிலுடைய; எம் பிரான் எம்பெருமானின்; புகழ் கல்யாண குணங்களின் புகழை; பார் பூமியிலுள்ளவர்களும்; விண் ஆகாயத்திலுள்ளவர்களும்; நீர் பாற்கடலிலுள்ளவர்களும்; முற்றும் கலந்து அனைவரும் சேர்ந்து; பருகிலும் அநுபவித்தாலும்; ஆர்வனோ திருப்தியுடையவன் ஆவேனோ?
ennai me; thannākki granting gyānam etc in matters related to him; ennāl by me; thannai he who is perfect; sīr qualities such as ṣeela (simplicity); peṛa to acquire; in sweet; kavi poem; sonna spoke; thiṛaththukku manner; āzhi am kai manifesting beautiful combination of hand and divine chakra; em pirān my lord who bestowed knowledge and made me realise the relationship with him; pugazh abundance of qualities; pār in his abodes of incarnations which is highlighted by earth; viṇ the supreme abode which is in the form of spiritual sky; nīr in vyūha state of milk ocean; muṝum all chĕthanas (sentient beings); kalandhu together; parugilum even if enjoyed; ārvanŏ will ī be satisfied?; maṛappu ilā not having forgetfulness; ennai me

TVM 7.9.9

3549 திறத்துக்கேதுப்புரவாம் திருமாலின்சீர் *
இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ? *
மறப்பிலா என்னைத் தன்னாக்கிஎன்னால்தன்னை *
உறப்பலஇன்கவி சொன்னவுதவிக்கே.
3549 திறத்துக்கே துப்புரவு ஆம் * திருமாலின் சீர் *
இறப்பு எதிர் காலம் * பருகிலும் ஆர்வனோ **
மறப்பு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
உறப் பல இன் கவி * சொன்ன உதவிக்கே? (9)
3549 tiṟattukke tuppuravu ām * tirumāliṉ cīr *
iṟappu ĕtir kālam * parukilum ārvaṉo **
maṟappu ilā ĕṉṉait * taṉṉākki ĕṉṉāl taṉṉai *
uṟap pala iṉ kavi * cŏṉṉa utavikke? (9)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Even if I could gather the entirety of the past and the entirety of the future in this moment, and revel in the magnificent glory of the Almighty, who has raised me to His level despite my ignorance, and inspired me to sing numerous sweet songs extolling His mighty power, I would still never feel fully satisfied.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār mustered the combined power of speech of the denizens, currently on Earth, spiritual world and Milk-ocean but now he invokes the aid of those who dwelt in those places in the past as well as the future inhabitants; with his insatiable ardour, he feels that all these agencies, put together, would still be inadequate.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறப்பு இலா மறதி இல்லாதவனான; என்னை என்னை; தன்னாக்கி தனக்கு உரியவனாக்கி; என்னால் தன்னை என்னைக்கொண்டு தனக்கு; உறப் பல பொருந்தும்படி பல; இன் கவி இனிய பாசுரங்களை; சொன்ன பாடுவித்து; உதவிக்கே உபகரித்த; ஆம் திருமாலின் அந்தத் திருமாலின்; திறத்துக்கே திறத்துக்கு; துப்புரவு அனுரூபமான சக்தியை உடைய; சீர் கல்யாண குணங்களை; இறப்பு இறந்த காலத்திலும்; எதிர் காலம் எதிர் காலத்திலும் இப்போதும்; பருகிலும் மூன்று காலங்களிலும் அநுபவித்தாலும்; ஆர்வனோ? நிறைவு பெற்றவனாக ஆக மாட்டேன்
thannākki granting knowledge which will ensure that ī don-t forget him; ennāl through me; thannai him; uṛa continuous words [without break]; pala in the count of thousand; in sweet; kavi poem; sonna spoke; udhavikku for the favour; thiṛaththukku the acts in which he engaged; ĕy matching; thuppuravu ām one who has ṣakthi (ability); thirumālin ṣriya:pathi #s (divine consort of ṣrī mahālakshmi); sīr qualities such as audhārya (magnanimity), ṣeela (simplicity), saulabhya (easy approachability) etc; iṛappu edhir kālam having the ability of all chĕthanas from past and future; parugilum even if enjoyed; ārvanŏ will ī be satisfied?; udhavi for the favour of engaging me in singing thiruvāimozhi; kaimmāṛu favour in return

TVM 7.9.10

3550 உதவிக்கைம்மாறு என்னுயிர்என்னவுற்றெண்ணில் *
அதுவும்மற்றாங்கவன் தன்னது, என்னால்தன்னை *
பதவியஇன்கவி பாடியஅப்பனுக்கு *
எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே.
3550 உதவிக் கைம்மாறு * என் உயிர் என்ன உற்று எண்ணில் *
அதுவும் மற்று ஆங்கவன் * தன்னது என்னால் தன்னை **
பதவிய இன் கவி * பாடிய அப்பனுக்கு *
எதுவும் ஒன்றும் இல்லை * செய்வது இங்கும் அங்கே (10)
3550 utavik kaimmāṟu * ĕṉ uyir ĕṉṉa uṟṟu ĕṇṇil *
atuvum maṟṟu āṅkavaṉ * taṉṉatu ĕṉṉāl taṉṉai **
pataviya iṉ kavi * pāṭiya appaṉukku *
ĕtuvum ŏṉṟum illai * cĕyvatu iṅkum aṅke (10)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

In all the vast expanse of the universe, there is nothing that I can offer to repay the Lord for inspiring me to compose these sweet songs, this grand hymnal praising His greatness. I thought I could offer Him my soul, but even that belongs to Him already.

Explanatory Notes

There’s no question of repaying the Lord’s extraordinary kindness; even otherwise, there is nothing the Āzhvār could call his own, which unto the Lord be could offer. Even the soul is not his but belongs to Him as His vassal from time immemorial. At least, in this land of dark nescience, people with their erronerous notions of ‘I’ and ‘Mine’ might commit the mistake of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உதவிக்கு திருவாய்மொழி பாடுவித்து கொண்ட; கைம்மாறு உதவிக்குப் பிரதியுபகாரமாக; என் உயிர் என் உயிரை; என்ன அவனுக்கு உரியது என்று; உற்று அவனுக்குக் காணிக்கை; எண்ணில் ஆக்கலாம் என்று நினைத்தால்; அதுவும் மற்று அந்த உயிரும் அவனுடையதே; ஆங்கு அவன் தன்னது ஆதலால் என்னைக் கொண்டு; என்னால் தன்னை என்னால் தன்னை; பதவிய இன் கவி மிருதுவான இனிய கவிதைகள; பாடிய அப்பனுக்கு பாடிக் கொண்ட பெருமானுக்கு; எதுவும் செய்வது என்னால் செய்யத் தக்கது; இங்கும் இந்த உலகத்திலும்; அங்கே மேல் உலகத்திலும்; ஒன்றும் இல்லை யாது ஒன்றும் இல்லை
en uyir my soul; enna as; uṝu aptly; eṇṇil if we tried to determine; āngu in that state of favouring in return; adhuvum that soul; maṝu further; avan thannadhu as it is exclusively subservient to him; ennāl through me; thannai him; padhaviya soft; in sweet; kavi poem; pādiya sang; appanukku for the benefactor; ingum in this [material] realm; angum in that spiritual realm; seyvadhu can be done; edhuvum anything even infinitesimal; onṛum illai not present.; ingum during the time of surrender, while in this leelā vibhūthi (material realm); angum during the time of kainkaryam (service), while in the nithya vibhūthi (spiritual realm)

TVM 7.9.11

3551 இங்குமங்கும் திருமாலன்றியின்மைகண்டு *
அங்ஙனேவண்குருகூர்ச்சடகோபன் *
இங்ஙனேசொன்ன ஓராயிரத்துஇப்பத்தும் *
எங்ஙனேசொல்லினும் இன்பம்பயக்குமே. (2)
3551 ## இங்கும் அங்கும் * திருமால் அன்றி இன்மை கண்டு *
அங்ஙனே வண் குருகூர்ச் * சடகோபன் **
இங்ஙனே சொன்ன * ஓர் ஆயிரத்து இப் பத்தும் *
எங்ஙனே சொல்லினும் * இன்பம் பயக்குமே (11)
3551 ## iṅkum aṅkum * tirumāl aṉṟi iṉmai kaṇṭu *
aṅṅaṉe vaṇ kurukūrc * caṭakopaṉ **
iṅṅaṉe cŏṉṉa * or āyirattu ip pattum *
ĕṅṅaṉe cŏlliṉum * iṉpam payakkume (11)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

These ten songs, out of the thousand sung by the esteemed Saint Kurukūr Caṭakōpaṉ, bring joy to whoever sings them, for they hold refuge in none other than "Tirumāl," both in this world and the spiritual realm.

Explanatory Notes

This decad, whether sung with devotion or otherwise, will breed joy. The Āzhvār, who heads the clan of ‘Prapannas’ looks upon the Supreme Lord, the Spouse of Mahālakṣmī, as the Sole Refuge, both here, in the state of supplication and in spiritual world, after attaining the final state of bissful union with the Lord. These songs, whether sung mechanically or with the ardour + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இங்கும் அங்கும் இந்த உலகத்திலும் பரமபதத்திலும்; திருமால் அன்றி எம்பெருமானைத் தவிர; இன்மை கண்டு வேறு இல்லை என்பதை அறிந்து; அங்ஙனே அவ்வண்ணமாகவே இருப்பவரான; வண் குருகூர் அழகிய குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; இங்ஙனே சொன்ன இந்த வகையில் அருளிச் செய்த; ஓர் ஆயிரத்து ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; எங்ஙனே சொல்லினும் எப்படிச் சொன்னாலும்; இன்பம் பயக்குமே பகவதநுபவமாகிய இன்பமே தரும்
thirumāl one who has ṣriya:pathithva (being the lord of ṣrī mahālakshmi) which is part of both pūrva vākya (first sentence) and uththara vākya (second sentence) [of dhvaya mahā manthram]; anṛi other than; inmai not present; kaṇdu thinking about; anganĕ having such state; vaṇ magnanimous; kurugūrch chatakŏpan āzhvār; sol accepting service by speech; inganĕ in this manner; sonna mercifully spoke; ŏr āyiraththu among the thousand pāsurams; ippaththum this decad; enganĕ leaving out the meaning in the form of his gratitude; sollilum even if [one] just recited the words; inbam endless bliss caused by experiencing bhagavān; payakkum will grant.; ezhil having qualities such as saundharyam (beauty); malar mādharum lakshmi who is enjoyable due to lotus being her residence