Chapter 1

Advise that wealth is ephemeral and self realization is lowly whereas serving the Lord is the highest goal - (ஒரு நாயகமாய்)

செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்
Upon attaining Bhagavān, Āzhvār realizes that there is no dearth in his life and wishes for all in existence on this earth to experience the same. Except for attaining Bhagavān, everything else in life is transitory, emphasizes Āzhvār.

It is said that Sri Ramanujar dedicated this set of divine hymns to the divine feet of ThiruNārāyanaperumāL residing in ThiruNārāyanapuram.
பகவானை அடைந்ததால், தாம் ஒரு குறையும் இல்லாதவராய் இருப்பதாக உணர்ந்த ஆழ்வார். தம்மைப் போலவே பூமியிலுள்ளார் அனைவரும் குறைவின்றி வாழவேண்டும் என்று நினைத்தார். எனவே பகவானை அடைவதைத் தவிர மற்றவை நிலையில்லாதவை என்று ஈண்டுக் கூறுகிறார்.

ஸ்ரீ ராமானுஜர் இத்திருவாய்மொழிப் பகுதியைத் திருநாராயணபுரத்திலுள்ள திருநாராயணப்பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகக் கூறுகிறார்.
Verses: 3123 to 3133
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will survive on this earth without troubles and reach Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.1.1

3123 ஒருநாயகமாய் ஓடவுலகுடனாண்டவர் *
கருநாய்கவர்ந்தகாலர் சிதைகியபானையர் *
பெருநாடுகாண இம்மையிலேபிச்சைதாம்கொள்வர் *
திருநாரணன்தாள் காலம்பெறச்சிந்தித்துய்ம்மினோ. (2)
3123 ## ஒரு நாயகமாய் ஓட * உலகு உடன் ஆண்டவர் *
கரு நாய் கவர்ந்த காலர் * சிதைகிய பானையர் **
பெரு நாடு காண * இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் *
திருநாரணன் தாள் * காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)
3123 ## ŏru nāyakamāy oṭa * ulaku uṭaṉ āṇṭavar *
karu nāy kavarnta kālar * citaikiya pāṉaiyar **
pĕru nāṭu kāṇa * immaiyile piccai tām kŏl̤var *
tirunāraṇaṉ tāl̤ * kālampĕṟac cintittu uymmiṉo (1)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

The great monarchs who once held supreme power will eventually beg for alms under the gaze of the very worlds they ruled, with broken bowls in hand and legs bitten by black dogs. Therefore, hurry, people, to meditate on the feet of Tirunāraṇaṉ, where your salvation truly lies.

Explanatory Notes

(1) The first three lines speak about the ephemeral wealth while the remaining lines deal with Eternal wealth. That the earthly riches, whatever their magnitude, are evanescent, has been brought out by citing the well-known example of mighty monarchs being reduced, in one and the same span of life, to abject poverty, seeking alms under cover of night. Treading upon black + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு நாயகமாய் பூமண்டலம் முழுமைக்கும் ஒப்பற்ற அரசனாய்; ஓட நெடுங்காலம்; உலகு உடன் உலகங்களை எல்லாம்; ஆண்டவர் அரசாட்சி புரிந்தவர்களானாலும் ஒரு காலவிசேஷத்திலே தரித்திரர்களாகி; கரு நாய் கருத்த நாய்களால்; கவர்ந்த கவ்வப்பட்ட; காலர் கால்களையுடையவர்களாய்; சிதைகிய உடைந்த; பானையர் பானைகளை உடையவர்களாய்; பெரு நாடு உலகத்தவர் எல்லோரும்; காண காணும்படியாக; இம்மையிலே இப்பிறவியிலேயே; தாம் தாங்களே; பிச்சை இரந்து உண்ணும் நிலை; கொள்வர் அடைவர் ஆதலால்; திரு நாரணன் திருமகள் கேள்வன் நாராயணனின்; தாள் திருவடிகளை; காலம் பெற விரைவாகப் பற்றி; சிந்தித்து சிந்தித்து வாழ்த்தி வணங்கி; உய்ம்மினோ வாழுங்கள்
oru nāyagamāy having supremely independent empire; ŏda to conduct (for a lengthy period of time); ulagu with the world; udan fitting firmly; āṇdavar those who protected their kingdom; karu black (unable to distinguish from the darkness); nāy by a dog; kavarndha bitten; kālar having leg; sidhaigiya (useless) broken and discarded; pānaiyar having that as the pot for begging; peru nādu by the people of this great earth (which was once ruled by them); kāṇa to be seen; immaiyilĕ in this birth itself; pichchai alms; thām themselves (asking after giving up their shame); kol̤var will accept;; thiru being nithyaṣrī (eternally wealthy); nāraṇan (the natural lord) nārāyaṇan-s; thāl̤ divine feet; kālam peṛa immediately, without wasting any time; sindhiththu meditate upon; uymmin be uplifted.

TVM 4.1.2

3124 உய்ம்மின்திறைகொணர்ந்து என்றுலகாண்டவர் * இம்மையே
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத்தாம்விட்டு *
வெம்மினொளிவெயில் கானகம்போய்க்குமைதின்பர்கள் *
செம்மின்முடித்திருமாலை விரைந்தடிசேர்மினோ.
3124 உய்ம்மின் திறைகொணர்ந்து * என்று உலகு ஆண்டவர் * இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் * பிறர் கொள்ளத் தாம் விட்டு **
வெம் மின் ஒளி வெயில் * கானகம் போய்க் குமை தின்பர்கள் *
செம்மின் முடித் திருமாலை * விரைந்து அடி சேர்மினோ (2)
3124 uymmiṉ tiṟaikŏṇarntu * ĕṉṟu ulaku āṇṭavar * immaiye
tam iṉcuvai maṭavāraip * piṟar kŏl̤l̤at tām viṭṭu **
vĕm miṉ ŏl̤i vĕyil * kāṉakam poyk kumai tiṉparkal̤ *
cĕmmiṉ muṭit tirumālai * viraintu aṭi cermiṉo (2)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Don't delay in worshiping 'Tirumāl', the One with a radiant crown, because the earthly overlords who once ruled for long, with many minor chiefs paying them tributes, become despondent. In this very lifetime, they lose their kingdoms and beloved consorts, living a miserable existence in the unforgiving forest.

Explanatory Notes

(i) Even those mighty kings who held sway for long, keeping under their heels many a chieftain forced to pay them tributes, lose their vast kingdoms and become helpless spectators when the lovely damsels kept in their proud harem, are forcibly seized by others under their very nose. If this happens to the mighty overlords what to say about the lesser men and their so-called + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திறை செலுத்தவேண்டிய கப்பத்தை; கொணர்ந்து கொண்டு வந்து கட்டி; உய்ம்மின் பிழைத்துப்போங்கள் என்று; உலகு கட்டளையிட்டுக் கொண்டு உலகை; ஆண்டவர் ஒருகுடையின் கீழ் ஆண்ட அரசர்கள்; இம்மையே இப்பிறவியிலேயே; தம் தங்களுடைய; இன் சுவை மடவாரை அன்பு மாதரை; பிறர் கொள்ள பிறர் கொள்ளும்படி; தாம் விட்டு தாமே கையிழந்து; வெம் மின் ஒளி கொடிய மின் ஒளி பரக்கின்ற; வெயில் வெய்யிலையுடைய; கானகம் போய் காட்டிலே போய்; குமைதின்பர்கள் பகைவர்களால் துன்புறுவர்; செம் மின் முடி ஆகையால் ஒளி வீசும் திருமுடியுடைய; திருமாலை திருமாலின் திருவடிகளை; விரைந்து விரைவாகப் பற்றி; அடி சேர்மினோ வாழ்த்தி வணங்கி வாழ்வீர்களாக
thiṛai tribute; koṇarndhu bringing along; uymmin survive; enṛu saying this (just words, not even action); ulagu world; āṇdavar who ruled over; immaiyĕ in the same life; tham their exclusive; in dear; suvai pleasure giving; madavārai wives (who are totally dependent on them and cannot live without them); piṛar others; kol̤l̤a to grab; thām they themselves; vittu abandon; vem very hot; min ol̤i (having a blinding effect for the one who saw ) such expansive brightness; veyil sunshine; kānagam in forest; pŏy go; kumaithinbargal̤ will be tortured (by other kings, there too);; sem min unstoppably radiant; mudi having crown; thirumālai divine husband of ṣrī mahālakshmi; viraindhu quickly with goodness; adi sĕrmin surrender unto the divine feet

TVM 4.1.3

3125 அடிசேர்முடியினராகி அரசர்கள்தாம்தொழ *
இடிசேர்முரசங்கள் முற்றத்தியம்பவிருந்தவர் *
பொடிசேர்துகளாய்ப்போவர்கள் ஆதலில்நொக்கென *
கடிசேர்துழாய்முடிக் கண்ணன்கழல்கள்நினைமினோ.
3125 அடி சேர் முடியினர் ஆகி * அரசர்கள் தாம் தொழ *
இடி சேர் முரசங்கள் * முற்றத்து இயம்ப இருந்தவர் **
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் * ஆதலில் நொக்கென *
கடி சேர் துழாய் முடிக் * கண்ணன் கழல்கள் நினைமினோ (3)
3125 aṭi cer muṭiyiṉar āki * aracarkal̤ tām tŏzha *
iṭi cer muracaṅkal̤ * muṟṟattu iyampa iruntavar **
pŏṭi cer tukal̤āyp povarkal̤ * ātalil nŏkkĕṉa *
kaṭi cer tuzhāy muṭik * kaṇṇaṉ kazhalkal̤ niṉaimiṉo (3)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

The earthly overlords of mighty empires, who care little for the kings waiting on them for days and get lost in festivities with drums beating fast in the courtyards, will soon be reduced to mere dust. Therefore, hurry to meditate on the feet of Kaṇṇaṉ, adorned with a tuḷaci garland full of sweet fragrance on His crown.

Explanatory Notes

The supercilious overlords who once took pride in despising their subordinates, will soon be reduced to a predicament wherein they will, in turn, be despised by others. From the durbar hall to the dust is not a long way cff and these men of erstwhile eminence become imperceptible non-entities, as good as the life-less dust men tread upon. The Āzhvār, therefore, advises + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடி சேர் பகைவர்களான அரசர்களின்; முடியினர் ஆகி முடிகள் தங்கள் காலடியில் இருக்க; அரசர்கள் தாம் அந்த அரசர்கள்; தொழ தொழும்படியாகவும்; இடி சேர் முரசங்கள் இடி போன்ற பேரிகைகள்; முற்றத்து தம் மாளிகை முற்றத்திலே; இயம்ப முழங்கும்படியாகவும்; இருந்தவர் வாழ்ந்தவர்கள்; பொடி சேர் பொடியோடு சேர்ந்து தூசாய்; துகளாய் பொடியாய்; போவர்கள் தொலைந்து போவார்கள்; ஆதலின் நொக்கென ஆதலால் விரைவாக; கடி சேர் மணம் கமழும்; துழாய் முடி துளசி மாலை அணிந்த; கண்ணன் கழல்கள் கண்ணன் திருவடிகளை; நினைமினோ நினையுங்கள்
adi at their feet; sĕr united; mudiyinarāgi having crown; arasargal̤ kings; thām themselves; thozha worship; idi sĕr thunderous; murasangal̤ drums; muṝaththu in the yard outside; iyamba making noise; irundhavar staying (with least bother for those who surrendered and hearing that noise); podi with a small portion of an object; sĕr united; thugal̤āy to become a piece of dust; pŏvargal̤ become worthless;; ādhalil thus; nokkena immediately; kadi sĕr having fragrance,; thuzhāy decorated with thiruththuzhāy (thul̤asi); mudi adorning crown; kaṇṇan krishṇa-s; kazhalgal̤ divine feet; ninaimin meditate

TVM 4.1.4

3126 நினைப்பான்புகில் கடலெக்கலின்நுண்மணலின்பலர் *
எனைத்தோறுகங்களும் இவ்வுலகாண்டுகழிந்தவர் *
மனைப்பால்மருங்கற மாய்தலல்லால் மற்றுக்கண்டிலம் *
பனைத்தாள்மதகளிறட்டவன் பாதம்பணிமினோ.
3126 நினைப்பான் புகில் கடல் எக்கலின் * நுண்மணலில் பலர் *
எனைத்தோர் உகங்களும் * இவ் உலகு ஆண்டு கழிந்தவர் **
மனைப்பால் மருங்கு அற * மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் *
பனைத் தாள் மத களிறு அட்டவன் * பாதம் பணிமினோ (4)
3126 niṉaippāṉ pukil kaṭal ĕkkaliṉ * nuṇmaṇalil palar *
ĕṉaittor ukaṅkal̤um * iv ulaku āṇṭu kazhintavar **
maṉaippāl maruṅku aṟa * māytal allāl maṟṟuk kaṇṭilam *
paṉait tāl̤ mata kal̤iṟu aṭṭavaṉ * pātam paṇimiṉo (4)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Reference Scriptures

BG. 8-17

Simple Translation

The number of rulers who once governed this land for a long time and then faded into oblivion, leaving no trace of their former possessions and surroundings, far exceeds the minute particles of sea sand. Therefore, worship the feet of the One who slew the monstrous elephant Kuvalayāpīṭa [Kuvalayāpīḍa].

Explanatory Notes

When a mighty tree comes crashing down, it destroys quite a few things all around, as well. Likewise, when the kingdoms of the earthly Lords perished the territories around also got wiped off, the unrelenting ravage of time! The Āzhvār is emphasising the intransigence of the mundane wealth in so many ways, song after song. Side by side, he stresses the positive need for + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நினைப்பான் புகில் நினைத்துப் பார்த்தால்; எனைத்தோர் அநேகயுகங்கள்; இவ் உலகு உகங்களும் இந்த உலகங்களை; ஆண்டு கழிந்தவர் ஆண்டு பின் இறந்தவர்கள்; கடல் எக்கலின் கடலின் மணல் மேட்டிலிருக்கும்; நுண் நுண்ணிய; மணலின் மணலைக்காட்டிலும்; பலர் அதிகம் இருப்பர்; மனைப்பால் தாங்கள் வாழ்ந்த வீடுகள்; மருங்கு அற தெரியாதபடி; மாய்தல் அல்லால் அழிந்தார்களே அன்றி நாம்; மற்றுக் கண்டிலம் வேறு எதையும் பார்க்கவில்லை; பனைத் தாள் பனைமரம் போன்ற கால்களையுடைய; மத களிறு குவலயாபீட யானையை; அட்டவன் கொன்ற பெருமானின்; பாதம் திருவடிகளைப் பற்றி; பணிமினோ வணங்குங்கள்
ninaippān to speak (about kings who died giving up bhagavath anubhavam (experience of bhagavān)); pugil set out; enaiththŏrugangal̤um many yugas; i ulagu this world; āṇdu ruled; kazhindhavar who passed away; kadal ekkalil in the ocean, sand dunes; nuṇ maṇalil than very tiny sand particles; palar many;; manaip pāl residence (where they lived); marungu and their surroundings; aṛa without any distinction [everything would be flattened]; māydhal allāl will only be destroyed; maṝu any remainder; kaṇdilam we have not seen;; panai well-rounded like a palm tree; thāl̤ having feet; madha kal̤iṛu mad elephant; attavan one who destroyed; pādham divine feet; paṇimin you all worship.

TVM 4.1.5

3127 பணிமின்திருவருளென்னும் அம்சீதப்பைம்பூம்பள்ளி *
அணிமென்குழலார் இன்பக்கலவியமுதுண்டார் *
துணிமுன்புநாலப் பல்லேழையர்தாமிழிப்பச்செல்வர் *
மணிமின்னுமேனி நம்மாயவன்பேர்சொல்லிவாழ்மினோ.
3127 பணிமின் திருவருள் என்னும் * அம் சீதப் பைம் பூம் பள்ளி *
அணி மென் குழலார் * இன்பக் கலவி அமுது உண்டார் **
துணி முன்பு நாலப் பல் ஏழையர் * தாம் இழிப்பச் செல்வர் *
மணி மின்னு மேனி * நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)
3127 paṇimiṉ tiruvarul̤ ĕṉṉum * am cītap paim pūm pal̤l̤i *
aṇi mĕṉ kuzhalār * iṉpak kalavi amutu uṇṭār **
tuṇi muṉpu nālap pal ezhaiyar * tām izhippac cĕlvar *
maṇi miṉṉu meṉi * nam māyavaṉ per cŏlli vāzhmiṉo (5)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Sing and live on the holy names of our amazing Lord, shining like a blue gem. Understand that those who pursue the cool and lovely bed and long to be embraced by sleek damsels with fine hair strands, end up impoverished and poorly dressed, mocked by many women as they go begging.

Explanatory Notes

Even the glamour of sensual pleasures wears cut soon; with energy dissipated and wealth gone, the participants cut a sorry figure, becoming the objects of ridicule by those very persons who once adored them. The material, wealth and the sensual pleasures derived therefrom, therefore, deserve to be eschewed alike. On the other hand, one should eke out one’s existence, singing the Sweet names of the Lord of innumerable auspicious traits.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் சீதப் பைம் அழகிய குளிர்ந்த பரந்த; பூம் பள்ளி பூப் படுக்கையில்; திரு அருள் பணிமின் திரு அருள் புரிய வேண்டும்; என்னும் என்று கூறுகின்ற; அணி மென் அழகிய மென்மையான; குழலார் கூந்தலையுடைய; இன்பக் கலவி பெண்களின் சேர்க்கையான; அமுது உண்டார் சிற்றின்பத்தை அநுபவித்தவர்கள்; துணி முன்பு நால துணி முன்னே தொங்கவும்; பல் ஏழையர் தாம் பல மாதர்கள் தங்களை; இழிப்ப இழிவாகக் கூறினாலும் அவர்களையே; செல்வர் நாடிச் செல்வார்கள் அதைத்தவிர்த்து; மணி மின்னு நீல மணி போல் மின்னும்; மேனி நம் திருமேனியையுடைய நம்; மாயவன் மாயவனின்; பேர் சொல்லி நாமங்களைப் பாடிப் பணிந்து; வாழ்மினோ வாழுங்கள்
am beautiful; sīdham cool; pai huge; pū pal̤l̤i in flower bed; thiruvarul̤ divine grace; paṇimin to bestow; ennum having attachment; aṇi with decorations; mel very tender; kuzhalār those who have hairs; inbak kalavi amudhu the nectar of blissful union; uṇdār those who enjoyed; thuṇi cloth; munbu in front; nāla hanging; pal many; ĕzhaiyar those damsels who were desirous previously; thām themselves; izhippa speak insulting words; selvar will go (back there due to their desire);; maṇi like a blue gem; minnu having radiance; mĕni having divine form; nam one who lets us (devotees) enjoy him; māyavan amaśing lord; pĕr divine names; solli reciting; vāzhmin live happily

TVM 4.1.6

3128 வாழ்ந்தார்கள்வாழ்ந்தது மாமழைமொக்குளின் மாய்ந்துமாய்ந்து *
ஆழ்ந்தாரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா *
வாழ்ந்தார்கள்வாழ்ந்தேநிற்பர் என்பதில்லை நிற்குறில் *
ஆழ்ந்தார்கடற்பள்ளி அண்ணலடியவராமினோ.
3128 வாழ்ந்தார்கள் வாழ்ந்தது * மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து *
ஆழ்ந்தார் என்று அல்லால் * அன்று முதல் இன்று அறுதியா **
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் * என்பது இல்லை நிற்குறில் *
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி * அண்ணல் அடியவர் ஆமினோ (6)
3128 vāzhntārkal̤ vāzhntatu * mā mazhai mŏkkul̤iṉ māyntu māyntu *
āzhntār ĕṉṟu allāl * aṉṟu mutal iṉṟu aṟutiyā **
vāzhntārkal̤ vāzhnte niṟpar * ĕṉpatu illai niṟkuṟil *
āzhntu ār kaṭaṟpal̤l̤i * aṇṇal aṭiyavar āmiṉo (6)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Throughout history, if you delve into the lives of those said to have flourished in this world in days gone by, you'll find that they didn't stay forever in that state but disappeared like bubbles in rainwater. So, if you seek a life that truly lasts, become the servant of the Lord who rests on the deep ocean.

Explanatory Notes

The earthly opulence goes on dwindling with the passage of time; from the beginning of creation up till now, it has been seen that the so-called earthly magnates, said to have flourished in this world with all that show of affluence, did not last long. They had their cups of sorrow duly served, while the riches of the mundane world buried them deep into the earth and they + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாழ்ந்தார்கள் நன்றாக வாழ்ந்தவர்களென்று; வாழ்ந்தது வாழ்ந்தது; மாமழை பெரிய மழையிலே; மொக்குளின் தோன்றிய நீர்க்குமிழி போல்; மாய்ந்து மாய்ந்து அழிந்து அழிந்து; ஆழ்ந்தார் என்று போனார்கள் என்று; அல்லால் அன்று சொல்வதைத் தவிர; முதல் இன்று அறுதியா அன்று முதல் இன்று வரை; வாழ்ந்தார்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தார்கள்; வாழ்ந்தே நிற்பர் வாழ்ந்தே இருந்தார்கள்; என்பது இல்லை என்பது இல்லை; நிற்குறில் நிலை நின்ற வாழ்வு வேண்டுமாகில்; ஆழ்ந்தார் ஆழமான நிறைந்த; கடல் பள்ளி கடலைப் படுக்கையாகக் கொண்ட; அண்ணல் பெருமான் ராமனுக்கு; அடியவர் ஆமினோ அடிமைப்பட்டிருங்கள்
vāzhndhārgal̤ those who think that they are living; vāzhndhadhu their life; mā mazhai in heavy rain; mokkul̤in like a bubble; māyndhu māyndhu crushed again and again; āzhndhār became very fallen; enṛu allāl other than this; anṛu mudhal from the time of creation; inṛu aṛudhiyā until today; vāzhndhārgal̤ those who lived; vāzhndhĕ niṛpar will live in the same manner; enbadhu the principle; illai is not present;; niṛkuṛil to have an eternal life; āzhndhu deep; ār abundance; kadal ocean; pal̤l̤i having as bed; aṇṇal to the lord; adiyavar devotee/servitor; āmin become.

TVM 4.1.7

3129 ஆமின்சுவையவைஆறோடு அடிசிலுண்டார்ந்தபின் *
தூமென்மொழிமடவாரிரக்கப் பின்னும்துற்றுவார் *
ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவராதலின் *
கோமின்துழாய்முடி ஆதியஞ்சோதிகுணங்களே.
3129 ஆம் இன் சுவை அவை * ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின் *
தூ மென் மொழி மடவார் இரக்கப் * பின்னும் துற்றுவார் **
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று * இடறுவர் ஆதலின் *
கோமின் துழாய் முடி * ஆதி அம் சோதி குணங்களே (7)
3129 ām iṉ cuvai avai * āṟoṭu aṭicil uṇṭu ārntapiṉ *
tū mĕṉ mŏzhi maṭavār irakkap * piṉṉum tuṟṟuvār **
īmiṉ ĕmakku ŏru tuṟṟu ĕṉṟu * iṭaṟuvar ātaliṉ *
komiṉ tuzhāy muṭi * āti am coti kuṇaṅkal̤e (7)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Those who indulged in hearty drinks and delicious dishes, pampered by sweet-tongued damsels, will soon lose all their wealth and end up on the brink of ruin, begging for food bit by bit. It's better to sing and rejoice together in the fame of the Lord, adorned with a tuḷaci garland on His crown.

Explanatory Notes

This is yet another stanza wherein the Āzhvār brings out, in sharp contrast, the fleeting and the firm, the ephemeral and the eternal. The pompous participants in the pleasures of the world put up a poor show when their wealth is gone and health is lost, naturally forsaken by the sycophants who once paraded in their courts and pampered them. Recounting the great glory + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆம் இன்சுவை பரமபோக்யமாய் இனிய; அவை ஆறோடு அறுசுவை; அடிசில் உண்டு அன்னத்தை உண்டு; ஆர்ந்தபின் வயிறு நிறைந்த பின்; தூ மென் மொழி வெகு அழகாகப் பேசவல்ல; மடவார் இரக்க மாதர்கள் கொஞ்சியபடி கூற; பின்னும் மறுக்கமாட்டாமல் மேலும்; துற்றுவார் உண்டவர்கள் அந்த செல்வம் அழிந்த பின்; ஈமின் எமக்கு அந்நிலை கெட்டு எனக்குக் கொடுங்கள்; ஒரு துற்று என்று ஒரு பிடி அன்னம் என்று; இடறுவர் தடுமாறிச் செல்வர்கள்; ஆதலின் ஆதலால்; துழாய் முடி துளசி மாலை அணிந்த; ஆதி அம் சோதி ஆதி அம் சோதியான பெருமானின்; குணங்களே கல்யாண குணங்களை; கோமின் சேர்த்து அனுபவியுங்கள்
ām ṃatching the nature; in pleasing; avai world renowned; āṛu suvaiyŏdu having six types of tastes (madhura (sweet), amla (sour), lavaṇa (salty), katu (pungent), kashāya (astringent), thiktha (bitter)); adisil (distinguished) food; uṇdu ate; ārndha pin after feeling full [filled with such food]; thū pure (due to affectionate attitude); men soft (audible); mozhi having speech; madavār (humble) damsels; irakka due to their desire; pinnum again; thuṝuvār will eat, with difficulty; emakku for us; oru thuṝu a handful of food; īmin give; enṛu asking so; idaṛuvar (even if they don-t get that, at every house) knock around;; ādhalil thus; thuzhāy decorated by thiruththuzhāy (thul̤asi); mudi the infinitely enjoyable lord, due to having the divine crown; ādhi being the cause of all; am beautiful; sŏdhi one who has radiant divine form, sarvĕṣvaran-s; guṇangal̤ qualities; kŏmin enjoy together; guṇam for qualities such as seelam (simplicity) etc

TVM 4.1.8

3130 குணங்கொள்நிறைபுகழ்மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து *
இணங்கியுலகுடனாக்கிலும் ஆங்கவனையில்லார் *
மணங்கொண்டபோகத்துமன்னியும்மீள்வர்கள்மீள்வில்லை *
பணங்கொளரவணையான் திருநாமம்படிமினோ.
3130 குணம் கொள் நிறை புகழ் * மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து *
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் * ஆங்கு அவனை இல்லார் **
மணம் கொண்ட போகத்து மன்னியும் * மீள்வர்கள் மீள்வு இல்லை *
பணம் கொள் அரவு அணையான் * திருநாமம் படிமினோ (8)
3130 kuṇam kŏl̤ niṟai pukazh * maṉṉar kŏṭaikkaṭaṉ pūṇṭiruntu *
iṇaṅki ulaku uṭaṉ ākkilum * āṅku avaṉai illār **
maṇam kŏṇṭa pokattu maṉṉiyum * mīl̤varkal̤ mīl̤vu illai *
paṇam kŏl̤ aravu aṇaiyāṉ * tirunāmam paṭimiṉo (8)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Even kings, known for their goodness and generosity, who wield immense wealth and have a great reputation, will suffer if they do not worship the Supreme Lord. Recite the holy names of the Lord who lies on a serpent-bed, and you will attain eternal wealth.

Explanatory Notes

Even kings of flawless fame will get dislodged from their seat of distinction, if they do not turn their minds towards God in grateful acknowledgement of His gifts. But those who laud the Lord’s glory and recite His holy names are bound to enjoy the perennial bliss of eternal service unto the Lord, even as Ādi-Śeṣa does. The Lord will also cling fast to such devotees even as He clings to Ādiśeṣa.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குணம் கொள் குணசாலிகளும்; நிறை புகழ் நிறைந்த புகழுடையவர்களுமான; மன்னர் மன்னர்களாய்; கொடைக்கடன் அறம் செய்தலாகிய; பூண்டிருந்து கடமையை மேற்கொண்டு; இணங்கி உலகு உலகத்தாருடன் பொருந்தி; உடன் ஆக்கிலும் இருந்து ஆட்சி புரிந்தாலும்; மணம் கொண்ட மிக்க போகங்களில்; போகத்து மன்னியும் பொருந்தி இருந்தாலும்; ஆங்கு அந்த அரச-செல்வம் விஷயமாக; அவனை எம்பெருமானை; இல்லார் ஆச்ரயிக்காதவர்கள்; மீள்வர்கள் அந்த இன்பத்திலிருந்து நீங்குவார்கள்; பணம் கொள் பணங்களையுடைய; அரவு ஆதிசேஷனை படுக்கையாக உடைய; திருநாமம் பெருமானின் திருநாமங்களை; படிமினோ பாடி ஆடி வணங்கினால்; மீள்வு இல்லை திரும்பி வராத மோக்ஷம் அடையலாம்
kol̤ being the abode; niṛai being complete (since everyone praises these qualities); pugazh famous; mannar crowned princes; kodai magnanimity (of making their wealth available for the welfare of all); kadan nature; pūṇdu assuming; irundhu well established; iṇangi fitting well together; ulagu world; udan ākkilum even while protecting harmoniously; āngu in matters relating to such aiṣwarya (wealth/control); avanai sarvĕṣvara; illār those who are not subservient to; maṇam freshness of daily celebrations; koṇda having; bŏgaththu joy of wealth; manniyum though staying firm in this manner; mīl̤vargal̤ will become bankrupt;; mīl̤vu illai you will attain the goal from where there is no return;; paṇam kol̤ with hoods which are expanded (due to coming in contact with him); aravu ādhiṣĕsha; aṇaiyān one who is inclined to be united with his devotees, since he is having as bed; thirunāmam divine names; padimin recite/practice; padi lands/properties

TVM 4.1.9

3131 படிமன்னுபல்கலன்பற்றோடறுத்து ஐம்புலன்வென்று *
செடிமன்னுகாயம்செற்றார்களும் ஆங்கவனையில்லார் *
குடிமன்னுமின்சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள்மீள்வில்லை *
கொடிமன்னுபுள்ளுடை அண்ணல்கழல்கள்குறுகுமினோ.
3131 படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து * ஐம்புலன் வென்று *
செடி மன்னு காயம் செற்றார்களும் * ஆங்கு அவனை இல்லார் **
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் * மீள்வர்கள் மீள்வு இல்லை *
கொடி மன்னு புள் உடை * அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)
3131 paṭi maṉṉu pal kalaṉ paṟṟoṭu aṟuttu * aimpulaṉ vĕṉṟu *
cĕṭi maṉṉu kāyam cĕṟṟārkal̤um * āṅku avaṉai illār **
kuṭi maṉṉum iṉ cuvarkkam ĕytiyum * mīl̤varkal̤ mīl̤vu illai *
kŏṭi maṉṉu pul̤ uṭai * aṇṇal kazhalkal̤ kuṟukumiṉo (9)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Even those who renounce inherited wealth and conquer the five senses through rigorous penance, with great aversion for this gross and dense body, will only reach the pleasant Svarga and eventually be thrown back to Earth. It's better to attain the feet of the Lord, who has the bird Garuḍa on His banner, and enjoy everlasting bliss.

Explanatory Notes

In the preceding stanzas, the Āzhvār deprecated the earthly pleasures. And now, he points out that the ‘Svarga’, the fairy land known for its unmixed pleasures attained through rigorous penance., abjuring the wealth and bodily pleasures over here, is not hospitable enough to provide these men asylum for all time. They are literally hurled down to Earth at the end of the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படி மன்னு பரம்பரையாய் வருகின்ற; பல் கலன் பலபல ஆபரணங்களையும்; பற்றோடு அறுத்து பற்றோடு நீக்கி; ஐம் புலன் வென்று ஐம் புலன்களையும் வென்று; செடி மன்னு தூறுமண்டும்படி; காயம் சரீரத்தை; செற்றார்களும் வருத்தித் தவம் செய்தவர்களும்; ஆங்கு அவ்விஷயத்தில்; அவனை எம்பெருமானை; இல்லார் ஆச்ரயிக்காதவர்கள்; குடி மன்னும் வெகு காலம் நிலைத்திருக்கும்; இன்சுவர்க்கம் இனிய சுவர்க்கம் அடைந்தாலும்; எய்தியும் மீள்வர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்; கொடி மன்னு ஆதலால் கொடியிலே; புள் உடை கருடனையுடைய; அண்ணல் கழல்கள் பெருமானின் திருவடிகளை; குறுகுமினோ பற்றுங்கள்; மீள்வு இல்லை மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும்
mannu wearing always (without removing); pal many types of; kalan ornaments; paṝŏdu with the attachment; aṛuththu giving up; aim pulan the five sensory organs (which are attached to worldly pleasures); venṛu winning over (to have full control over them); sedi mannu (due to lengthy penance) bushes formed around them; kāyam body; seṝārgal̤um troubled (through fasting etc); mannum permanent (existing for a long time, as a result of their penance); kudi having settlements; in very enjoyable; suvargam svarga (heaven); eydhiyum even if they attained; avanai bhagavān (who is the benefactor); āngu staying there; illār those who don-t take shelter of him; mīl̤vargal̤ will lose such heavenly life;; mīl̤villai to acquire ever-lasting result; kodi in the dhvaja (flag); mannu staying eternally; pul̤ periya thiruvadi (garudāzhvār); udai one who has; aṇṇal sarvĕṣvaran-s (supreme lord-s); kazhalgal̤ divine feet; kuṛugumin try to reach; kuṛuga in proximity (of self instead of going astray in worldly pleasures)

TVM 4.1.10

3132 குறுகமிகவுணர்வத்தொடுநோக்கி எல்லாம்விட்ட *
இறுகலிறப்பென்னும்ஞானிக்கும் அப்பயனில்லையேல் *
சிறுகநினைவதோர்பாசமுண்டாம் பின்னும்வீடில்லை *
மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில்வீடஃதே.
3132 குறுக மிக உணர்வத்தொடு * நோக்கி எல்லாம் விட்ட *
இறுகல் இறப்பு என்னும் * ஞானிக்கும் அப் பயன் இல்லையேல் **
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் * பின்னும் வீடு இல்லை *
மறுகல் இல் ஈசனைப் பற்றி * விடாவிடில் வீடு அஃதே (10)
3132 kuṟuka mika uṇarvattŏṭu * nokki ĕllām viṭṭa *
iṟukal iṟappu ĕṉṉum * ñāṉikkum ap payaṉ illaiyel **
ciṟuka niṉaivatu or pācam uṇṭām * piṉṉum vīṭu illai *
maṟukal il īcaṉaip paṟṟi * viṭāviṭil vīṭu aḵte (10)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Even the wise person who strives through many austerities solely for liberation will encounter obstacles due to petty desires or may forever be lost in self-enjoyment, thus not getting divine service. Therefore, it's better to seek refuge in the immaculate Lord and attain the supreme bliss that lasts forever.

Explanatory Notes

The Āzhvār exhorts people to give up striving after ‘Kaivalya Mokṣa’, even though it is everlasting, unlike the limited stay in Svarga and seek, instead, the Supreme bliss of eternal service unto the Lord, as enunciated in the opening stanza of this decad. The ‘Kaivalya Niṣṭa’ subjects himself to an extremely rigorous course of mental and physical discipline in his attempt + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குறுக உலக விஷயங்களில் பற்று இல்லாதபடி; உணர்வத்தொடு ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு; மிக நோக்கி நன்றாகச் சேர்த்து; எல்லாம் விட்ட எல்லாப் பற்றுகளையும் விட்டவனாய்; இறுகல் ஆத்மாவில் மட்டும்; இறப்பு என்னும் விருப்பம் கொண்டவனான; ஞானிக்கும் ஞானிக்கும்; அப் பயன் எம்பெருமானை உபாயமாக; இல்லையேல் பற்றுதல் இல்லையாகில்; சிறுக சிறிய பேறுகளை; நினைவது நினைக்கக் காரணமான; ஓர் பாசம் உண்டாம் ஓர் பற்று உண்டாகும்; பின்னும் மேலும்; வீடு இல்லை மோக்ஷமும் இல்லை; மறுகல் இல் ஆனபின் ஒரு குற்றமும் இல்லாத; ஈசனைப் பற்றி எம்பெருமானை அடைந்து; விடாவிடில் நீங்காமல் கைங்கர்யம் பண்ணுவதே; வீடு அஃதே மோக்ஷமாகும்
uṇarvaththodu with the āthmā who is identified by his gyānam (knowledge); miga nŏkki meditating upon it intensely (to attain vision of self); ellām all goals (other than āthmā); vitta the one who has given up; iṛugal exclusively ending on āthmā; iṛappu mŏksha (liberation); ennum considering as the goal; gyānikkum for the gyāni (wise); appayan accepting (bhagavān, who is the ultimate exclusive goal) as the means; illaiyĕl if not present; siṛuga lowly goals; ninaivadhu to think about; ŏr pāsam attachment; uṇdām will exist;; pinnum further; vīdu mŏksham (in the form of attaining self-enjoyment); illai will not be attained;; maṛugal il being the opposite of all defects; īsanai (natural) controller of all and the lord who is the abode of all auspicious qualities; paṝi surrendering unto him (considering him as the goal and the means); vidā vidil not leaving him ever (like the others who accept ulterior benefits from bhagavān [and leave him]); ahdhĕ that itself; vīdu is parama purushārtham (the ultimate goal); uyya to be uplifted

TVM 4.1.11

3133 அஃதேஉய்யப்புகுமாறென்று கண்ணன்கழல்கள்மேல் *
கொய்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்குற்றேவல் *
செய்கோலத்தாயிரம் சீர்த்தொடைப்பாடலிவைபத்தும் *
அஃகாமல்கற்பவர் ஆழ்துயர்போயுய்யற்பாலரே. (2)
3133 ## அஃதே உய்யப் புகும் ஆறு என்று * கண்ணன் கழல்கள் மேல் *
கொய் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் குற்றேவல் **
செய் கோலத்து ஆயிரம் * சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும் *
அஃகாமல் கற்பவர் * ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)
3133 ## aḵte uyyap pukum āṟu ĕṉṟu * kaṇṇaṉ kazhalkal̤ mel *
kŏy pūm pŏzhil cūzh * kurukūrc caṭakopaṉ kuṟṟeval **
cĕy kolattu āyiram * cīrt tŏṭaip pāṭal ivai pattum *
aḵkāmal kaṟpavar * āzh tuyar poy uyyaṟpālare (11)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Those who learn these ten songs out of the thousand composed by Kurukūr Caṭakōpaṉ, pure and elegant, emphasizing that salvation lies only in worshiping Lord Tirunāraṇaṉ's feet, will be relieved from deep distress and attain salvation.

Explanatory Notes

(i) The Āzhvār ends up this decad, just as he began it, by stressing the importance of taking refuge at Śrīman Nārāyaṇa’s lotus feet which dispel our distress and elevate us unto Him.

(ii) Chaste and elegant: The chastity of Tiruvāymoḻi as a composition, lies in the fact that it has been compiled by the Āzhvār in a spirit of Divine Service with supreme dedication. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உய்ய புகும் ஆறு உய்வதற்கு உரிய வழி; அஃதே எம்பெருமானின் தாள்களே; என்று என்று அறுதியிட்டு; கண்ணன் கண்ணனின்; கழல்கள் மேல் திருவடிகளின் மேல்; கொய் பூம் பறிக்கப்படும் பூக்கள் நிறைந்த; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; செய் கோலத்து அருளிச்செய்த அலங்காரமான; குற்றேவல் கைங்கர்ய ரூபமாயும்; சீர் தொடை சீரும் தொடையுமுடைய; பாடல் கல்யாணகுணங்களை இட்டுத் தொடுத்த; ஆயிரம் ஆயிரம் பாசுரங்களில்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும்; அஃகாமல் குறைவின்றி; கற்பவர் கற்பவர்கள்; ஆழ் துயர் போய் ஆழ்ந்த துயர் நீங்கப் பெற்ற; உய்யற்பாலரே நற்கதி அடைவார்கள்
pugum approach; āṛu upāyam (means); ahdhĕ only that (saying firmly so); kaṇṇan krishṇa-s; kazhalgal̤ mĕl on the divine feet; koy pluckable; having abundance of flowers; pozhil having garden; kurugūr the leader of āzhvārthirunagari; ṣatakŏpan nammāzhvār; kuṝĕvalgal̤ in the form of confidential services; sey performed; kŏlam decorated to perfection; āyiram thousand; sīrth thodai having sīr and thodai (grammatical aspects in composing verse); pādal thiruvāimozhi in the form of a song; ivai paththum this decad; ahkāmal without losing; kaṛpavar those who learn; āzh being immersed (in worldly wealth and self-enjoyment); thuyar grief; pŏy having eradicated; uyyaṛpālar will be engaged in upliftment of self (leading to devotion towards bhagavān); bālanāy having a very infant-like form