Chapter 5

The great joy attained by Āzhvār through union with Emperumān - (அம் தாமத்து)

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்
These divine hymns enumerate the joy-filled experience of Āzhvār when Bhagavān decides to put a stop to Āzhvār’s separation anxiety and despair by reuniting with him.
ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி அந்தாமத்தன்பு’-பிரவேசம்

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ஸ்ரீ கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் + Read more
Verses: 2945 to 2955
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will reach Vaikuntam
  • TVM 2.5.1
    2945 ## அம் தாமத்து அன்பு செய்து * என் ஆவி சேர் அம்மானுக்கு *
    அம் தாமம் வாழ் முடி சங்கு * ஆழி நூல் ஆரம் உள **
    செந்தாமரைத்தடம் கண் * செங்கனி வாய் செங்கமலம் *
    செந்தாமரை அடிகள் * செம்பொன் திரு உடம்பே (1)
  • TVM 2.5.2
    2946 திரு உடம்பு வான் சுடர் * செந்தாமரை கண் கை கமலம் *
    திரு இடமே மார்பம் * அயன் இடமே கொப்பூழ் **
    ஒருவு இடமும் * எந்தை பெருமாற்கு அரனே ஓ *
    ஒருவு இடம் ஒன்று இன்றி * என்னுள் கலந்தானுக்கே (2)
  • TVM 2.5.3
    2947 என்னுள் கலந்தவன் * செங்கனி வாய் செங்கமலம் *
    மின்னும் சுடர் மலைக்கு * கண் பாதம் கை கமலம் **
    மன்னும் முழு ஏழ் உலகும் * வயிற்றின் உள *
    தன்னுள் கலவாதது * எப் பொருளும் தான் இலையே (3)
  • TVM 2.5.4
    2948 எப் பொருளும் தான் ஆய் * மரதகக் குன்றம் ஒக்கும் *
    அப்பொழுதைத் தாமரைப்பூக் * கண் பாதம் கை கமலம் **
    எப்பொழுதும் நாள் திங்கள் * ஆண்டு ஊழி ஊழிதொறும் *
    அப்பொழுதைக்கு அப்பொழுது * என் ஆரா அமுதமே (4)
  • TVM 2.5.5
    2949 ஆரா அமுதமாய் * அல் ஆவியுள் கலந்த *
    கார் ஆர் கருமுகில் போல் * என் அம்மான் கண்ணனுக்கு **
    நேரா வாய் செம்பவளம் * கண் பாதம் கை கமலம் *
    பேர் ஆரம் நீள் முடி நாண் * பின்னும் இழை பலவே (5)
  • TVM 2.5.6
    2950 பலபலவே ஆபரணம் * பேரும் பலபலவே *
    பலபலவே சோதி * வடிவு பண்பு எண்ணில் **
    பலபல கண்டு உண்டு * கேட்டு உற்று மோந்து இன்பம் *
    பலபலவே ஞானமும் * பாம்பு அணை மேலாற்கேயோ (6)
  • TVM 2.5.7
    2951 பாம்பு அணைமேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் *
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் * ஏறு உடன் ஏழ் செற்றதுவும் **
    தேம் பணைய சோலை * மராமரம் ஏழ் எய்ததுவும் *
    பூம் பிணைய தண் துழாய்ப் * பொன் முடி அம் போர் ஏறே (7)
  • TVM 2.5.8
    2952 பொன் முடி அம் போர் * ஏற்றை எம்மானை நால் தடம் தோள் *
    தன் முடிவு ஒன்று இல்லாத * தண் துழாய் மாலையனை **
    என் முடிவு காணாதே * என்னுள் கலந்தானை *
    சொல்முடிவு காணேன் நான் * சொல்லுவது என்? சொல்லீரே (8)
  • TVM 2.5.9
    2953 சொல்லீர் என் அம்மானை * என் ஆவி ஆவிதனை *
    எல்லை இல் சீர் * என் கருமாணிக்கச் சுடரை **
    நல்ல அமுதம் * பெறற்கு அரிய வீடும் ஆய் *
    அல்லி மலர் விரை ஒத்து * ஆண் அல்லன் பெண் அல்லனே (9)
  • TVM 2.5.10
    2954 ஆண் அல்லன் பெண் அல்லன் * அல்லா அலியும் அல்லன் *
    காணலும் ஆகான் * உளன் அல்லன் இல்லை அல்லன் **
    பேணுங்கால் பேணும் * உரு ஆகும் அல்லனும் ஆம் *
    கோணை பெரிது உடைத்து * எம் பெம்மானைக் கூறுதலே (10)
  • TVM 2.5.11
    2955 ## கூறுதல் ஒன்று ஆராக் * குடக் கூத்த அம்மானை *
    கூறுதலே மேவிக் * குருகூர்ச் சடகோபன் **
    கூறின அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    கூறுதல் வல்லார் உளரேல் * கூடுவர் வைகுந்தமே (11)