TCV 76

அன்பினாலேயே ஆழியானைக் காணமுடியும்

827 புன்புலவழியடைத்து அரக்கிலச்சினைசெய்து *
நன்புலவழிதிறந்து ஞானநற்சுடர்கொளீஇ *
என்பிலெள்கிநெஞ்சுருகி உள்கனிந்தெழுந்ததோர் *
அன்பிலன்றியாழியானை யாவர்காணவல்லரே?
827 puṉ pula vazhi aṭaittu * arakku-ilacciṉai cĕytu *
naṉ pula vazhi tiṟantu * ñāṉa naṟcuṭar kŏl̤īi **
ĕṉpu il ĕl̤ki nĕñcu uruki * ul̤ kaṉintu ĕzhuntatu or
aṉpil aṉṟi āzhiyāṉai * yāvar kāṇa vallare? (76)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-2

Simple Translation

827. Only if people control the feelings that arise from their senses and light up their wisdom by following the good path and melt in their bones and hearts for him and love him who carries a discus can they see him. CHECK

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன் தாழ்ந்த விஷயங்களில்; புல இந்திரியங்கள் செல்லும்; வழி அடைத்து வழியை அடைத்து; அரக்கு இலச்சினை செய்து அரக்கு முத்திரையிட்டு; நன் புல வழி ஸத்விஷய மார்க்கத்தை; திறந்து திறந்து விட்டு; ஞான நல்ல ஞானமாகிய நல்ல; சுடர் கொளீஇ விளக்கொளியை ஏற்றிவைத்து; என்பு இல் எள்கி எலும்புகளாலன சரீரம் தளர்ந்து; நெஞ்சு உருகி மனம் உருகி; உள்கனிந்து உள்ளே பழுத்து பரமபக்தி ரூபமாக; எழுந்தது எழுந்ததான; ஓர் அன்பில் அன்றி ஒப்பற்ற பக்தியாலல்லாது; ஆழியானை சக்கரத்தை கையிலுடையவனை; யாவர் காண வல்லரே? யார் தான் காண முடியும்?