The Bliss of the Deva World is Not Wanted; Let Us Proceed on the Path of Divine Bliss
தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்
2725 மின்னிடையாரோடும் விளையாடிவேண்டிடத்து *
மன்னும்மணித்தலத்து மாணிக்கமஞ்சரியின் *
மின்னினொளிசேர் பளிங்குவிளிம்படுத்த *
மன்னும்பவளக்கால் செம்பொன் செய்மண்டபத்துள் *
அன்னநடைய அரம்பையர்தம்வகை வளர்த்த *
இன்னிசை யாழ்ப்பாடல்கேட்டின்புற்று * -